அஜித்துக்கு கண்ணிலும் கோளாறு! ஒரு நாளைக்கு ஒருகை மாத்திரை! வெள்ளை முடி சீக்ரெட்.. பகீர் கிளப்பிய பயில்வான்!

First Published Mar 12, 2024, 12:25 PM IST

பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத விஷயங்களை பேசி வரும் பயில்வான் ரங்கநாதன், அஜித்தின் பிரச்சனைகள் குறித்து சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு கொடுத்துள்ள பேட்டியில் பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

எந்த ஒரு சினிமா பின்னணியும் இன்றி, திரையுலகில் காலடி எடுத்து வைத்து தன்னுடைய நம்பிக்கையால் மட்டுமே இன்று 100 கோடி சம்பளம் வாங்கும் நடிகராக உயர்ந்திருப்பவர் அஜித் குமார். தன்னால் முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனம் படைத்தவர். மற்றவர்களின் மகிழ்ச்சியை பார்த்து ரசிக்கும் மனிதர் என இவரை பற்றி பலர் சொல்லி கேள்விப்பட்டிருப்போம். 

Ajith

இவர் நடிப்பில் கடைசியாக கடந்த ஆண்டு 'துணிவு' திரைப்படம் வெளியான நிலையில், இந்த படத்திற்கு பின்னர்... அஜித் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க கமிட் ஆன படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து தாமதமாகி கொண்டே சென்றது. இறுதியாக விக்கி கூறிய கதையில் மனத்திருப்தி இல்லாத அஜித் மற்றும் லைகா நிறுவனம், விக்கியை இந்த படத்தில் இருந்து வெளியேற்றியது.

'காதல்' பரத்துக்கு இந்த நிலையா? இயக்குனரின் வாரிசுக்கு வில்லனாகிறார்!
 

Ajithkumar

விக்கிக்கு பதிலாக தல-யின் அடுத்த படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்குவார் என கூறப்பட்டது. 'விடாமுயற்சி' என்கிற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு 60 சதவீதத்திற்கு மேல் முடிவடைந்து விட்டநிலையில், 3-ஆம் கட்ட படப்பிடிப்பை மார்ச் 15-ஆம் தேதிக்கு மேல் மீண்டும் ஆஜர்பைஜான் நாட்டில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. 
 

Ajithkumar

அஜர்பைஜான் நாட்டுக்கு செல்வதற்கு முன்பாக அஜித் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை மேற்கொண்ட போது தான் அவருக்கு காதுக்கு கீழ் நரம்பில் சின்ன புடைப்பு போல் இருப்பது கண்டறியப்பட்டு, இதற்காக மைனர் சர்ஜரி ஒன்றும் நடந்தது. இதுகுறித்த முழுமையான விவரம் வெளியாகும் முன்பே... பல்வேறு வதந்திகள் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா இதுகுறித்து விளக்கம் கொடுத்து, இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

பெட்டில் படுத்து கொண்டு மார்க்கமான உடையில்.. குண்டக்க மண்டக்க போஸ் கொடுத்து கிக் ஏற்றும் திவ்யா பாரதி!
 

இதை தொடர்ந்து அஜித் பற்றி யாருக்கும் தெரியாத சில தகவல்களை வெளியிட்டுள்ளார் பயில்வான். அஜித்துக்கு கண்களிலும் பிரச்சனை உள்ளதாகவும், அதற்காக அவர் டிரீட்மென்ட் எடுத்து வருவது தனக்கு தெரியும் என கூறியுள்ளார். மேலும் அஜித் மிகவும் நல்ல மனிதர் பலருக்கு உதவியுள்ளார் என அவரின் அருமை பெருமைகளை கூறியுள்ள பயில்வான், ஒருமுறை அஜித்தை சந்திக்க அவரின் அலுவலகம் சென்ற போது, ஒரு நாளைக்கு ஒரு கை அளவு மாத்திரைகளை எடுத்து வருவதாகவும், அவ்வளவு பிரச்சனைகள் தனக்கு உள்ளதாக கூறியதாகவும் அஜித் தெரிவித்தாராம்.

Bayilvan Ranganathan

அஜித்துக்கு இதுவரை 8 ஆபரேஷன் நடந்துள்ளது. முதுகு தண்டில் அவருக்கு கீரல் விழுந்துள்ளது. இதன் காரணமாகவே அவருக்கு குறிப்பிட்ட நடன அசைவை கொண்டே நடனம் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார். அதே போல் அஜித் வெள்ளை முடியுடன் திரைப்படங்களில் நடிக்க காரணம் கூட மருத்துவர்களின் அறிவுரை என கூறியுள்ளார்.

சீன் போடும் நயன்தாரா! வயிற்றில் குழந்தையோடு 'தி கோட் லைஃப்' பட விழாவிற்கு வந்த அமலாபால்! குவியும் பாராட்டு!
 

click me!