போட்டியின்றி சிங்கம் போல் சிங்கிளாக ஓடிடியில் ரிலீஸ் ஆகும் அருண் விஜய்யின் ‘மிஷன் சாப்டர் 1’ - ரிலீஸ் தேதி இதோ

First Published Feb 8, 2024, 2:25 PM IST

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அருண் விஜய் ஹீரோவாக நடித்த மிஷன் சாப்டர் 1 திரைப்படம் ஓடிடியில் போட்டியின்றி ரிலீஸ் ஆக உள்ளதாக கூறப்படுகிறது.

Mission Chapter 1

அருண் விஜய் நடிப்பில் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்த திரைப்படம் தான் மிஷன் சாப்டர் 1. இப்படத்தை ஏ.எல்.விஜய் இயக்கி இருந்தார். அதிரடி ஆக்‌ஷன் கதையம்சம் கொண்ட இப்படத்தில் எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்திருந்தனர். மேலும் லியோ படத்தில் விஜய்யின் மகளாக நடித்திருந்த இயல் இப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இப்படம் கடந்த ஜனவரி மாதம் 12-ந் தேதி திரைக்கு வந்தது.

Arun Vijay

தனுஷின் அயலான் மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த அயலான் ஆகிய படங்களுக்கு போட்டியாக ரிலீஸ் ஆன இப்படத்திற்கு ஆரம்பத்தில் குறைந்த அளவிலான தியேட்டர்கள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து படத்துக்கு பாசிடிவ் விமர்சனங்கள் கிடைத்ததை அடுத்து தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்தது. இதனால் பாக்ஸ் ஆபிஸில் சைல்ட்டாக சம்பவம் செய்தது இப்படம்.

இதையும் படியுங்கள்... குடிகாரனிடம் அடிவாங்கிய கீர்த்தி சுரேஷ்... நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

Mission Chapter 1 OTT release Date

பொங்கலுக்கு ரிலீஸ் ஆன அயலான், கேப்டன் மில்லர் ஆகிய படங்கள் ஓடிடியிலும் போட்டி போட்டு ரிலீஸ் ஆகின்றன. அதன்படி அயலான் திரைப்படம் பிப்ரவரை 9-ந் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்திலும், கேப்டன் மில்லர் திரைப்படம் அதே தேதியில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்திலும் ரிலீஸ் ஆக உள்ளது. ஆனால் இதனுடன் பொங்கலுக்கு திரைக்கு வந்த மிஷன் சாப்டர் 1 திரைப்படம் மட்டும் ஓடிடியில் சற்று தாமதமாக ரிலீஸ் ஆக உள்ளது.

Mission Chapter 1 Movie OTT Update

அதன்படி மிஷன் திரைப்படம் வருகிற பிப்ரவரி 16-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளதாம். பொங்கலுக்கு தியேட்டரில் போட்டி போட்டு ரிலீஸ் செய்ததை போல் ஓடிடியிலும் போட்டி போட்டு ரிலீஸ் செய்தால் படத்திற்கான ரீச் எதிர்பார்த்த அளவு இருக்காது என்பதற்காக ஒருவாரம் தாமதமாக இப்படத்தை ஓடிடியில் வெளியிடுகின்றனர். அதுமட்டுமின்றி அடுத்த வாரம் மிஷன் படத்துக்கு போட்டியாக ஓடிடியில் எந்த படம் ரிலீஸாகாது என்பதால் ஸ்மார்ட் ஆக இந்த முடிவை எடுத்துள்ளது படக்குழு.

இதையும் படியுங்கள்... ஷிவாங்கியை போல் குக் வித் கோமாளி சீசன் 5-ல் இருந்து விலகுகிறாரா ரவீனா? அவரே சொன்ன ஷாக்கிங் பதில்

click me!