பைவ் ஸ்டார் ஹோட்டலில் அனிதா விஜயகுமார் கொடுத்த ராஜ விருந்து; பேமிலியோடு ஆஜரான அருண் விஜய் - வைரலாகும் போட்டோஸ்

First Published Mar 20, 2024, 8:44 AM IST

அனிதா விஜயகுமார், தன்னுடைய மகளின் திருமணத்தை தடபுடலாக நடத்திக் கொடுத்த உறவினர்களுக்கு பைவ் ஸ்டார் ஹோட்டலில் ராஜ விருந்து கொடுத்துள்ளார்.

நடிகர் விஜயகுமாரின் குடும்பத்தில் இருந்து சினிமா பக்கமே தலைகாட்டாத ஒருவர் என்றால் அது அவரது மகள் அனிதா தான். டாக்டருக்கு படித்து முடித்த இவர் மருத்துவராக பணியாற்றி வந்தார். இதையடுத்து தன்னுடன் படித்தவரையே காதலித்து திருமணம் செய்துகொண்ட அனிதா, கணவரோடு வெளிநாட்டில் செட்டில் ஆனார்.

அனிதா விஜயகுமாருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இதில் அவரது மகள் தியாவும் வெளிநாட்டில் டாக்டருக்கு படித்து முடித்துள்ளார். கல்லூரியில் படிக்கும்போதே தில்லான் என்பவரை காதலித்து வந்த தியா, குடும்பத்தினர் சம்மதத்துடன் அவரை கடந்த மாதம் கரம் பிடித்தார்.

அனிதா தன்னுடைய மகளின் திருமணத்தை மிக பிரம்மாண்டமாக நடத்தி முடித்தார். சென்னையில் உள்ள ஷெராட்டன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற இத்திருமணத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

அனிதாவின் மகள் தியாவுக்கு திருமணம் முடிந்து ஒரு மாதம் ஆகும் நிலையில், தன் மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்திக் கொடுத்த தன்னுடைய குடும்பத்தினருக்கு பைவ் ஸ்டார் ஹோட்டலில் ராஜ விருந்து கொடுத்து அசத்தி இருக்கிறார் அனிதா.

இதையும் படியுங்கள்.... சூடுபிடித்த 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்கள் தேர்வு! இளம் நடிகையுடன் பேச்சு வார்த்தை.. வெளியான லிஸ்ட்

இந்த விருந்தில் அனிதாவின் தந்தை விஜயகுமார், அக்கா கவிதா, தம்பி அருண் விஜய் மற்றும் உறவினர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். அப்போது எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார் அனிதா.

அக்கா அனிதா விஜயகுமார் உடன் அவரது தம்பி அருண் விஜய் ஜாலியாக உரையாடியபோது எடுத்த கேண்டிட் புகைப்படம் இது.

அனிதா விஜயகுமார் கொடுத்த பிரம்மாண்ட விருந்தில் கலந்துகொண்ட அருண் விஜய், விஜயகுமார் மற்றும் அவரின் குடும்பத்தினர் அடங்கிய பேமிலி போட்டோ இது.

திருமணமான தன்னுடைய பேத்தி தியாவை பாசத்தோடு கட்டியணைத்து தன்னுடைய அன்பை வெளிப்படுத்திய நடிகர் விஜயகுமாரின் அழகிய தருணம்

அக்கா கொடுத்த விருந்தில் கலந்துகொள்ள தன்னுடைய மனைவி ஆர்த்தி மற்றும் பேமிலியோடு வந்திருந்த அருண் விஜய் உற்சாகம் பொங்க செல்பி எடுத்து மகிழ்ந்த தருணம் இது.

இதையும் படியுங்கள்.... ஷூட்டிங் ஸ்பாட்டில் கூடிய ஆயிரக்கணக்கான ரசிகர்கள்! வேன் மீது ஏறி அன்பை வெளிப்படுத்திய தளபதி.! வைரல் வீடியோ!

click me!