வைல்டு கார்டு எண்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ள விஜய் டிவி பிரபலம்... ஆஹா இவங்க டேஞ்சரான ஆளாச்சே!

First Published Oct 12, 2023, 1:16 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் 2 பேர் வெளியேறி உள்ளதால், விரைவில் வைல்டு கார்டு எண்ட்ரியாக விஜய் டிவி பிரபலம் ஒருவர் எண்ட்ரி கொடுக்க உள்ளாராம்.

BiggBoss Tamil season 7 contestants

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் அக்டோபர் 1-ந் தேதி தொடங்கியது. இரண்டு வீடுகளுடனும், பல்வேறு புது விதிமுறைகளுடனும் நடத்தப்பட்டு வரும் இந்நிகழ்ச்சி 9 ஆண் போட்டியாளர்கள் 9 பெண் போட்டியாளர்கள் என மொத்தம் 18 போட்டியாளர்களுடன் தொடங்கியது. இதில் முதல் வார இறுதியில் அனன்யா எலிமினேட் ஆனார். அவர் வெளியே சென்ற அடுத்த நாளே பவா செல்லதுரையும் பிக்பாஸ் வீட்டை விட்டு பாதியிலேயே வெளியேறினார்.

Ananya Rao

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 11 நாட்களே ஆகும் நிலையில், அதற்குள் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறிவிட்டதால், இந்த வாரம் எலிமினேஷன் கிடையாது என விஜய் டிவியே அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது. இருப்பினும் உள்ளே உள்ள போட்டியாளர்களுக்கு எலிமினேஷன் இல்லை என்கிற தகவல் தெரியாது. இதனால் அவர்கள் பதற்றத்துடனே உள்ளனர். இந்த வார நாமினேஷனில் மாயா, விஷ்ணு, ஐஷூ, அக்‌ஷயா, பூர்ணிமா, பிரதீப், விசித்ரா ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

archana Ravichandran

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளர்கள் அனுப்பப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த சீசனிலும் விரைவில் வைல்டு கார்டு போட்டியாளரை வீட்டுக்குள் அனுப்பி வைக்க உள்ளாராம் பிக்பாஸ். அதன்படி முதல் வைல்டு கார்டு போட்டியாளராக சீரியல் நடிகை அர்ச்சனா ரவிச்சந்திரன் தான் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ளாராம். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி 2 சீரியலில் வில்லியாக நடித்து பிரபலமானவர் ஆவார்.

archana Ravichandran as wild card entry

சீரியலில் வில்லியாக மிரட்டிய அர்ச்சனா, பிக்பாஸ் வீட்டுக்குள் சென்று தன்னுடைய ஒரிஜினல் வில்லத்தனத்தை காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அர்ச்சனா இரண்டு வாரம் நடைபெற்ற நிகழ்வுகளை பார்த்துவிட்டு உள்ளே செல்ல உள்ளதால் அவரது எண்ட்ரிக்கு பின் ஆட்டம் சூடுபிடிக்க வாய்ப்புள்ளது. அர்ச்சனா வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே செல்ல உள்ளது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... லியோவுக்கு முட்டுக்கட்டை போடும் வாரிசு தயாரிப்பாளர்... தளபதி படத்துக்கே தண்ணிகாட்டும் தில் ராஜு! காரணம் என்ன?

click me!