முத்துப்பாண்டியை விருந்துக்கு அழைத்து வந்து வில்லங்கத்தில் மாட்டிவிட்ட ஷண்முகம் - அண்ணா சீரியலில் செம ட்விஸ்ட்

First Published Apr 16, 2024, 3:56 PM IST

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் அரிவாளை தூக்கிய ஷண்முகத்தை பரணி அமைதிப்படுத்திய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

Anna serial

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் அரிவாளை தூக்கிய ஷண்முகத்தை அமைதிப்படுத்தும் பரணி, எதையும் யோசித்து செய்யணும் என்று சொல்லிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, பிரியாணி சாப்பிட்டு படுத்து தூங்கிய ஷண்முகம் திடீரென எழுந்து எனக்கு ஒரு ஐடியா கிடைச்சிடுச்சு என்று சொல்கிறான். 

Zee Tamil Anna Serial

மறுநாள் பஞ்சாயத்து ஆட்களை சந்தித்து என் தங்கச்சி இசக்கி சௌந்தரபாண்டி வீட்டில சந்தோசமாக இருக்காளா இல்லையானு நான் தெரிஞ்சிக்கணும் என்று முறையிடுகிறான். அடுத்து சௌந்தரபாண்டி வீட்டிற்கு கிளம்பி வர, சனியன் ஏற்கனவே ஷண்முகம் வரும் விஷயத்தை சொல்லி விடுகிறான், பஞ்சாயத்து ஆட்களுடன் வரும் ஷண்முகம் என் தங்கச்சியையும் மாப்பிள்ளையையும் விருந்துக்கு கூப்பிட வந்திருப்பதாக சொல்ல, முத்துப்பாண்டி அதெல்லாம் வர முடியாது என்று சொல்கிறான். 

இதையும் படியுங்கள்... அத்தை மேல கைவச்ச அவ்ளோதான்... தீபா விட்ட அறையால் ஆடிப்போன ரியா - கார்த்திகை தீபம் சீரியல் ட்விஸ்ட்

Anna serial Update

ஷண்முகம் பஞ்சாயத்து ஆட்களிடம் முத்துப்பாண்டி காலில் விழுந்து தெரியாமல் தாலி கட்டி விட்டதாக மன்னிப்பு கேட்ட விஷயங்களை சொல்லி முறையிடுகிறான். இதையடுத்து பஞ்சாயத்து ஆட்கள் முத்துப்பாண்டி விருந்துக்கு போய் தான் ஆகணும் என்று சொல்ல, சௌந்தரபாண்டியும் இப்போ நீ போகலனா தப்பா போயிரும் என்று சொல்ல, அவன் யூனிபார்மில் கிளம்பி வருகிறான். ஷண்முகம் நீங்க என்ன வேலைக்கா போறீங்க? விருந்துக்கு தானே வரீங்க வேட்டி சட்டையில் வாங்க என்று சொல்லி ட்ரெஸ்ஸை மாற்ற வைக்கிறான். 

Anna serial Today Episode

அதுமட்டுமின்றி இருவரையும் ஊர்வலமாக அழைத்து செல்கிறான், எல்லாரிடமும் இசக்கி புருஷனை விருந்துக்கு கூட்டிட்டு போறேன் என்று சொல்லி சொல்லி முத்துபாண்டியை வெறுப்பேற்றுகிறான். வீட்டிற்கு வந்ததும் ஆரத்தி எடுத்து ஒரு சிறப்பு விருந்தினர் வர வேண்டி இருக்கு என்று காக்க வைத்து வெங்கடேஷனை வீட்டிற்கு வர வைக்க, முத்துப்பாண்டி பயங்கர காண்டாகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.

இதையும் படியுங்கள்... டான்ஸ் ஜோடி டான்ஸ் பைனலில் தோல்வியடைந்த பெண்... சூப்பர் ஹிட் சீரியல் சான்ஸ் தந்து இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹீரோ

click me!