SK Love : என் லைஃப்ல இருந்த ஒரே லவ்... அதுவும் ஒன்சைடு லவ்- காதல் தோல்வி குறித்து மனம்திறந்த சிவகார்த்திகேயன்

First Published Apr 28, 2024, 10:23 AM IST

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன், முதன்முறையாக தன்னுடைய காதல் தோல்வி பற்றி பேசி இருக்கிறார்.

sivakarthikeyan

சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்குள் வந்து தன்னுடைய விடாமுயற்சியால் விஸ்வரூப வெற்றிகண்டவர் தான் சிவகார்த்திகேயன். தற்போது கோலிவுட்டில் வசூல் சக்ரவர்த்தியாக திகழ்ந்து வருகிறார் சிவகார்த்திகேயன். விஜய், அஜித், ரஜினி, கமல் போன்ற டாப் ஹீரோக்களுக்கு அடுத்தபடியாக பாக்ஸ் ஆபிஸில் இவரின் படங்கள் சக்கைப்போடு போட்டு வருகின்றன. அதேபோல் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.

sivakarthikeyan upcoming movies

கோலிவுட்டின் அடுத்த தளபதியாக கொண்டாடப்படும் சிவகார்த்திகேயன், தற்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒன்று அமரன். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார். வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து தான் இப்படம் எடுக்கப்பட்டு உள்ளது. இதன் படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

இதையும் படியுங்கள்... Indian 2: ஜூன்மாத ரிலீஸில் இருந்து பின்வாங்கும் இந்தியன் 2! கடைசி நேரத்தில் கமல் படத்துக்கு வந்த சிக்கல் என்ன?

SK Sivakarthikeyan

இதுதவிர ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திலும் ஹீரோவாக நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் என்கிற கன்னட நடிகை நடிக்கிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பும் செம்ம ஸ்பீடாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய முதல் காதல் தோல்வியில் முடிந்தது பற்றி பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.

sivakarthikeyan Love Failure

அதில் சிவகார்த்திகேயனை பற்றி யாருக்குமே தெரியாத ரகசியத்தை சொல்லுமாறு ரசிகை ஒருவர் கேட்க, அதற்கு ஒன் சைடு லவ் ஒன்று இருந்ததாக கூறிய எஸ்.கே, கொஞ்ச நாட்களிலேயே அது போய்விட்டதாகவும், அந்த பெண் வேறொரு பையனோடு கமிட் ஆனதாக கூறிய அவர், தனது வாழ்க்கையில் இருந்த ஒரே ஒரு காதல் அதுதான் என கூறினார்.

Sivakarthikeyan one side love

அந்த பெண்ணை சினிமாவுக்கு வந்ததுக்கு பின்னர் சந்தித்தீர்களா என்கிற கேள்விக்கு பதிலளித்த எஸ்.கே, நான் டெலிவிஷன்ல ஒர்க் பண்ணும்போது அந்த பெண்ணை சென்னை சிட்டி செண்டர் வணிக வளாகத்தில் பார்த்தேன். ஆனா அவரிடம் பேசவில்லை. பார்க்கும்போது ராஜா சாரோட ஆர்.ஆர் ஒன்னு பின்னாடி போச்சு. ஆனா அப்போ அந்தப் பெண் கூட இருந்தது அவர் காதலித்த பையன் இல்ல. அதைப் பார்க்கும்போது அப்பாடி அவனுக்கும் கிடைக்கல என சந்தோஷப்பட்டதாக சிவகார்த்திகேயன் அந்த பேட்டியில் கலகலப்பாக கூறி இருக்கிறார்.

இதையும் படியுங்கள்... Samantha : பான் இந்தியா ஸ்டாராக உயர்ந்த பல்லாவரம் பொண்ணு.. நடிகை சமந்தாவின் வியக்க வைக்கும் சொத்து மதிப்பு இதோ

click me!