Amala Paul: வயிற்றில் குழந்தையோடு... வளைகாப்பில் கணவருடன் ரொமான்ஸ் செய்த அமலா பால்! வைரலாகும் நியூ போட்டோஸ்

First Published Apr 15, 2024, 1:48 PM IST

நடிகை அமலா பாலுக்கு சமீபத்தில் வளைகாப்பு நடந்து முடிந்த நிலையில், அதுகுறித்த புதிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

மலையாள திரையுலகை சேர்ந்த நடிகை அமலா பால், 'வீரசேகரன்' என்கிற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படம் இவருக்கு மிகப்பெரிய தோல்வி படமாக மாறிய நிலையில்... 'சிந்து சமவெளி' படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஆரம்பத்தில் இது எந்த மாதிரி கதை என்பது தெரியாமல், பட வாய்ப்பு கிடைத்தால் போதும் என ஒப்புக்கொண்ட அமலா பால், ஒரு கட்டத்தில் இப்படத்தின் கதைக்களம் குறித்து தெரிய வந்த பின்னர் இப்படத்தில் இருந்து வெளியேறுவதாக கூறினார்.

இந்த ட்விஸ்டை எதிர்பார்களையே? எதிர்நீச்சல் சீரியலில் ரீ-என்ட்ரி கொடுக்கும் பிரபலம்.. காத்திருக்கும் சம்பவம்!

ஆனால் அக்ரீமெண்ட்டில் அமலா பால் படத்தில் நடிக்க சம்பாதித்து கையெழுத்து போட்டு விட்டதால்... அதை காட்டி, அந்த படத்தில் கட்டாயப்படுத்தி அவரை நடிக்க வைத்ததாகவும் ஒரு தகவல் உண்டு. இப்படம் அமலா பாலுக்கு பாசிட்டிவ் பப்ளிசிட்டியை பெற்றுத்தரவில்லை என்ராலும் நெகடிவ் பப்ளிசிட்டியை பெற்று கொடுத்தது.

இதை தொடர்ந்து அமலா பால் இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில், விதாரத்துக்கு ஜோடியாக நடித்த அமலா மைனா திரைப்படம்... அமலா பாலில் நெகடிவ் தோற்றத்தை மாற்றி பாசிட்டிவான நடிகையாக பார்க்க வைத்தது மட்டும் இன்றி, அமலா பாலின் சினிமா கேரியரில் மிகப்பெரிய மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

வெங்கடேஷ் பட் பற்றி போட்ட ஒற்றை பதிவு! சர்ச்சையில் சிக்கிய குரேஷி 'குக் வித் கோமாளி'யை விட்டு வெளியேறுகிறாரா?

பின்னர் தமிழில் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்த அமலா பால், ஆர்யா, ஜெயம் ரவி, விஜய், தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் அளவுக்கு உயர்ந்தார். 

முன்னணி நடிகையாக இருக்கும் போதே, இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து கடந்த 2014-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர், இதை தொடர்ந்து கருத்து வேறுபாடு காரணமாக ஒரு சில வருடங்களிலேயே விவாகரத்து பெற்று பிரிந்தார்.

மகளின் 2-வது திருமணத்தை ஜாம் ஜாம்னு நடத்தி முடித்தார் இயக்குனர் ஷங்கர்... முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து

விவாகரத்தான இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் ஏ.எல்.விஜய் மருத்துவர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், அமலா பால் சரியான பட வாய்ப்புகள் அமையாததால் நண்பர்களுடன் ட்ரெக்கிங் செல்வது, ஆன்மீகத்தில் கவனம் செலுத்துவது என இருந்த இடம் தெரியாமல் போனார்.

இதை தொடர்ந்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம்... தன்னுடைய நீண்டநாள் நண்பரான ஜகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம்ஸ் செய்து கொண்ட அமலா பால், கர்ப்பமான பின்னரே திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.

அஜித்தின் மாமியார் இவங்க தானா? நடிகை நதியா போல் செம யங்கா இருக்காங்களே! போட்டோ பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்

7 மாத கர்ப்பிணியாக இருந்த நடிகை அமலா பாலுக்கு... ஜகத் தேசாய் குடும்ப வழக்கப்படி சமீபத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போது கணவருடன் மிகவும் ரொமான்டிக்காக எடுத்து கொண்ட போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

click me!