ரிலீஸுக்கு முன்பே 1000 கோடி வசூல் செய்த படம்.. கண்டிப்பா கல்கி 2898 AD படம் இல்ல..

First Published Apr 15, 2024, 4:47 PM IST

புஷ்பா 2 படத்தின், ப்ரீ ரிலீஸ் பிசினஸ் ஏற்கனவே ரூ 1000 கோடியைத் தாண்டிவிட்டதாக வர்த்தக வட்டாரங்கள் கூறுகின்றன.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு படம் 100 கோடி வசூல் செய்தாலே அது வெற்றிப் படமாக கருதப்பட்டது. அதாவது உள்நாட்டில் ரூ.100 கோடி வசூல் செய்தாலே அது 100 கோடி கிளப்பில் இணைந்துவிடும். பெரிய நடிகர்களின் படங்கள் கூட அப்படி தான்.. ஆனால் இப்போது, பெரிய பட்ஜெட் படங்களின் வெற்றியின் உண்மையான அளவுகோல் 1000 கோடி கிளப்பில் நுழைவதுதான் என்று சிலர் கூறிவருகின்றனர்.

உள்நாட்டு நிகர பாக்ஸ் ஆபிஸ் வசூலைக் கணக்கில் எடுத்துக் கொள்ளும் 100-கோடி கிளப்பைப் போலல்லாமல், 1000-கோடி என்பது ஒரு படத்தின் மொத்த உலகளாவிய வசூலை நிர்ணயிக்கிறது. அதாவது, ஆமீர் கானின் தங்கல் படம் உள்நாட்டில் ரூ.387 கோடி வசூல் செய்துள்ள நிலையில், உலகளவில் ரூ.2000 கோடி வசூலித்துள்ளது. பதான் மற்றும் ஜவான் ஆகிய இரண்டும் இந்தியாவில் சுமார் ரூ. 500-600 கோடி வசூல் செய்தது., ஆனால் உலகளவில் ரூ. 1000 கோடிக்கு மேல்.

அந்த வகையில் சில சமயங்களில், ப்ரீ-ரிலீஸ் பிசினஸில் மட்டும் இந்தத் தொகையை வசூலிக்கும் திரைப்படங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று வர்த்தக நிபுணர்கள் வாதிடுகின்றனர். ஆனால் ரிலீஸுக்கு முன்பே ஒரு படம் ரூ.1000 கோடி கிளப்பில் இணைந்துவிட்டது. ஆம். புஷ்பா 2 தான் அந்த படம்.

புஷ்பா 2: தி ரூல் என்பது 2024 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியா படமாகும்., 2021-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் புஷ்பா: தி ரைஸ் படத்தின் இரண்டாம் பாகமான இப்படம், 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி உள்ளது..

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மட்டும் 200 கோடி ரூபாய்க்கு படத்தின் ப்ரீ ரிலீஸ் உரிமை கோரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புஷ்பா 1 வட இந்தியாவிலும் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற படம் என்பதால், இந்தி பெல்ட்டில் விநியோக உரிமை கணிசமாக அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி புஷ்பா 2 படத்தின், ப்ரீ ரிலீஸ் பிசினஸ் ஏற்கனவே ரூ 1000 கோடியைத் தாண்டிவிட்டதாக வர்த்தக வட்டாரங்கள் கூறுகின்றன.புஷ்பா 2 வெளிவர இன்னும் நான்கு மாதங்கள் உள்ளன. புஷ்பாவின் மொத்த ப்ரீ-ரிலீஸ் பிசினஸ், பதான், கதார் 2 மற்றும் அனிமல் போன்ற பிளாக்பஸ்டர்களின் உலகளாவிய மொத்த வசூலை விட அதிகம் என்று கூறப்படுகிறது.

இதன் மூலம் கல்கி 2898 AD மற்றும் கங்குவா போன்ற பிரம்மாண்ட பான்-இந்தியப் படங்களையும் புஷ்பா 2 முறியடித்துள்ளது. என்று கூறப்படுகிறது. சுகுமார் இயக்கி உள்ள இந்தப் படத்தில் அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்கிறார். மேலும். ஃபஹத் பாசில், ராஷ்மிகா மந்தனா, ஜகபதி பாபு, பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!