Good Bad Ugly : விடாமுயற்சியை வெயிட்டிங் லிஸ்டில் போட்டுவிட்டு... குட் பேட் அக்லி படத்துக்கு தாவும் அஜித்..!

First Published Apr 28, 2024, 12:30 PM IST

நடிகர் அஜித்குமார் கைவசம் உள்ள விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களின் ஷூட்டிங் குறித்த அப்டேட் ஒன்று கசிந்துள்ளது.

vidaamuyarchi

நடிகர் அஜித் குமார் நடிப்பில் தற்போது இரண்டு படங்கள் தயாராகி வருகிறது. அதில் லைகா நிறுவனம் தயாரிப்பில் அவர் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். அதுமட்டுமின்றி ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், பிக்பாஸ் பிரபலம் ஆரவ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதன் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

Good Bad Ugly

மறுபுறம் அஜித் கைவசம் உள்ள மற்றொரு படம் குட் பேட் அக்லி. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். அஜித்தின் தீவிர ரசிகர்கரான இவர், இதற்கு முன்னர் த்ரிஷா இல்லேனா நயன்தாரா, மார்க் ஆண்டனி போன்ற மாஸ் ஹிட் படங்களை இயக்கி இருக்கிறார். குட் பேட் அக்லி திரைப்படத்தை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இதன் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்... மாடு மேய்க்கணுமா? அதுக்கு நான் சரிப்பட்டு வரமாட்டேன்.. வீடு தேடி வந்த சூப்பர்ஹிட் படவாய்ப்பை நழுவவிட்ட உதயநிதி

Vidaamuyarchi shooting

இந்த நிலையில், அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங் குறித்த அப்டேட் கசிந்துள்ளது. அதன்படி அப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மே மாதம் 10-ந் தேதி ஐதராபாத்தில தொடங்க உள்ளதாம். அதேபோல் அஜித் நடிப்பில் நீண்ட நாட்களாக கிடப்பில் கிடக்கும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பும் வருகிற ஜூன் மாதம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. குட் பேட் அக்லி படத்தின் முதல் ஷெட்யூலை முடித்த பின்னர் அஜித் விடாமுயற்சி படப்பிடிப்பில் இணைவார் என எதிர்பார்ககப்படுகிறது.

vidaamuyarchi delayed

விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க அஜர்பைஜான் நாட்டில் தான் நடைபெற்றது. கடந்த ஜனவரி மாதம் அங்கிருந்து சென்னை திரும்பிய படக்குழு, அதன்பின்னர் படப்பிடிப்பை நடத்தவே இல்லை. இதனால் விடாமுயற்சி படம் என்னாச்சு என ரசிகர்கள் ஆர்வமுடன் அப்டேட் கேட்டு வந்தனர். அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அதன் ஷூட்டிங் அப்டேட் தற்போது வெளியாகி இருக்கிறது. விடாமுயற்சி திரைப்படத்தை இந்த ஆண்டு இறுதியிலும், குட் பேட் அக்லி திரைப்படத்தை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கும் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர்.

இதையும் படியுங்கள்...  மலையாள சினிமா தந்த மாஸ்டர் பீஸ் படம்... தியேட்டரை தொடர்ந்து ஓடிடியில் மாஸ் காட்ட வருகிறது மஞ்சும்மல் பாய்ஸ்

click me!