Ajith Family: பீஸ்ட் படம் பார்க்க தியேட்டர் வந்த அஜித் குடும்பம்..! யாரெல்லாம் வந்தார்கள் தெரியுமா..?

First Published Apr 17, 2022, 11:33 AM IST

Ajith Family: பீஸ்ட் படத்தை அஜித் மனைவியும், நடிகையுமான ஷாலினி தியேட்டரில் பார்த்துள்ளார். இவர், சென்னையில் உள்ள சத்யம் தியேட்டருக்கு மகள் அனுஷ்கா குமாருடன் வந்து படம் பார்த்து விட்டு சென்றதாகவும், புகைப்படம் எடுக்க அனுமதியில்லை என்றும் தகவல் கிடைத்துள்ளது. 

Ajith shalini

நடிகர் விஜய்யின் பீஸ்ட் படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த 13ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. இந்த படம் கலவையான விமர்சனங்களை தாண்டி வசூல் சாதனை படைத்து வருகிறது. இந்த படம் முதல் நாள் வசூலிலேயே வலிமை படத்தின் முதல் நாள் வசூலை வீழ்த்தி விட்டது.

Ajith shalini

பீஸ்ட் திரைப்படம் மற்ற இடங்களில் வசூலில் சொதப்பினாலும் தமிழ் நாட்டில் இதுவரை இருந்த சாதனைகளையும் முறியடித்து நம்பர் 1 திரைப்படமாக மாறியுள்ளது. இப்படம் வெளியான இரண்டு நாட்களில் ரூ.100 கோடிக்கு மேல் பாக்ஸ் ஆபிஸில் வசூலித்து தந்தது. 

Ajith Shalini

படத்தின் வெளியீட்டை கட்அவுட், பாலாபிஷேகம் என திருவிழா போல் கொண்டாடினர்கள் ரசிகர்கள். வித்தியாசமான விஜய்யை இந்தப்படத்தில் பார்க்கலாம் என்றும், காமெடியில் கலந்து கட்டி அடிக்கும் நெல்சன், தற்போது ஆக்ஷனில் பின்னி பிடலெடுத்துள்ளதாக படத்தை கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள்.

Ajith shalini

விஜய், பிரபல மால் ஒன்றில் தீவிரவாதிகளால் ஹைஜாக் செய்யப்பட்ட பொதுமக்களை, தீவிரவாதிகளிடம் இருந்து காப்பாற்றுவார். இந்த திரைப்படத்தின் அதிரடி ஆக்ஷன், த்ரில்லர், காமெடி கலந்த பீஸ்ட் ரசிகர்களை பெரிதும் அஜித் ரசிகர்களை கவர்ந்துள்ளது. அனிருத்தின் இசையில் வெளியான அரபிக் குத்து பாடம்  ஏற்கனவே வேற லெவலில் ஹிட்டாகி விட்டன.
 

Ajith shalini

இந்நிலையில், பீஸ்ட் படத்தை பார்த்து கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், தற்போது நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி மற்றும் மகள் அனோஸ்கா ஆகியோர் பீஸ்ட் படத்தை சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் பார்த்து இருக்கின்றனர். மேலும், அஜித்தின் மகள் அனோஷ்கா, விஜய்யின் தீவிர ரசிகையாம்.

Ajith Shalini

அதுமட்டுமின்றி, அஜித் தற்போது ஹைதராபாத்தில் தனது அடுத்த படத்தின் ஷூட்டிங்கில் பிஸியான இருந்து  வருகிறார். மேலும், ஏகே 61 படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை அஜித்தின் பிறந்த நாளான மே 1 ம் தேதி வெளியிட போனி கபூர் திட்டமிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

click me!