Ajith - Shalini: ரோமியோ.. ஜூலியட்டாக மாறி ரொமான்ஸில் பட்டையை கிளப்பும் அஜித் - ஷாலினி! வைரலாகும் Cute போட்டோ!

First Published Apr 24, 2024, 11:21 PM IST

அஜித் - ஷாலினி இன்று தங்களின் 24-ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாடும் நிலையில் இவர்களின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
 

தமிழ் சினிமாவில் எத்தனையோ நட்சத்திர ஜோடிகள் இருந்தாலும், ரசிகர்களுக்கு ஒரு சிலர் மட்டும் எப்போதுமே ஸ்பெஷல். அப்படி பட்ட ஸ்பெஷல் ஜோடி தான் அஜித் - ஷாலினி.
 

அஜித் இயக்குனர் சரண் இயக்கத்தில், 'அமர்க்களம்' படத்தில் நடித்த போது, அந்த படத்தில் ஹீரோயினாக நடித்த ஷாலினியை காதலிக்க துவங்கினார். ஆரம்பத்தில் அஜித்தின் காதலை ஏற்றுக்கொள்ள ஷாலினி தயங்கினாலும், பின்னர் ஏற்றுக்கொண்டார். 

Ajith Shalini : 24வது திருமணநாளை 5 ஸ்டார் ஹோட்டலில் ஜம்முனு கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி - வைரலாகும் போட்டோஸ்
 

அஜித் - ஷாலினி வீட்டிற்கு இவர்களின் காதல் விவகாரம் தெரிய வர, பெற்றோர் பச்சைக்கொடி காட்டிய பின்னர், இருவரும் கடந்த 2000-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்க்கு பின்னர் ஷாலினி திரையுலகை விட்டு மொத்தமாக விலகினார்.

Ajith Shalini

இந்த நட்சத்திர ஜோடிகளுக்கு தற்போது அனோஸ்கா என்கிற மகளும் ஆத்விக் என்கிற மகன் ஒருவரும் உள்ளனர். பல வருடமாக தன்னுடைய குடும்பத்தின் மேல் கேரமராவின் கண் படாமல் அஜித் பார்த்து கொண்ட நிலையில், கடந்த ஒரு வருடமாக ஷாலினி தன்னுடைய பிள்ளைகளுடன் வெளியில் வருவதை அதிகம் பார்க்க முடிகிறது.

ரஜினி பட வில்லன் உள்ளிட்ட 12 பேருடன் டேட்டிங்! 2 வருடத்தில் விவாகரத்து! போதையால் வாழ்க்கையை தொலைத்த ஹீரோயின்!

அந்த வங்கியில் அஜித் சமீபத்தில் தன்னுடைய மகளின் பிறந்தநாளை, துபாய்யில் கப்பலில் கொண்டாடினார் இது குறித்த போட்டோக்களும் வெளியாகி வைராகின. இதை தொடர்ந்து  தங்களின் திருமண நாளை நட்சத்திர ஹோட்டலில் கொண்டாடி மகிழ்ந்துள்ளார். அஜித் - ஷாலினி ரோமியோ ஜூலியட் போல் காதல் பொங்க  அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

click me!