Local Holiday : நாளை விடுமுறை.. வெளியான முக்கிய அறிவிப்பு..! என்ன காரணம் தெரியுமா?

First Published May 9, 2024, 6:37 AM IST

தேனி வீரபாண்டி ஸ்ரீ கெளமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு நாளை தேனி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

Veerapandi Sri Gowmariamman Temple

தேனி அருகே உள்ள வீரபாண்டியில், பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ வீரபாண்டி கௌமாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த திருக்கோயிலில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் 8 நாட்கள் வரை நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா மே 7ம் தேதி முதல்  14ம் தேதி நிறைவு பெறும். 

Theni Local Holiday

இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நாளை நடைபெற உள்ளது. இதனை காண தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் அவர்களின் பாதுகாப்பு கருதி நாளை தேனி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

Theni District Collector Shajeevana

இதுதொடர்பாக தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: தேனி வீரபாண்டி ஸ்ரீ கெளமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Government office

இந்த உள்ளுர் விடுமுறை செலவாணி முறிச்சட்டம்-1881 (Negotiable Instruments Act-1881) கீழ் வராது என்பதால், அன்றைய தினம் தேனி மாவட்டத்தில் தலைமை கருவூலம், சார்நிலை கருவூலகங்கள் மற்றும் அரசு பாதுகாப்பான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களுடன், செயல்படும். மேலும் உள்ளுர் விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக மே 25ம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

click me!