ஜெயிலர் நிகழ்த்திய பாக்ஸ் ஆபிஸ் மேஜிக்கை தவறவிட்ட லால் சலாம்... 3 நாளில் இவ்வளவு தான் கலெக்‌ஷனா?

First Published Feb 12, 2024, 11:48 AM IST

ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியாகி உள்ள லால் சலாம் திரைப்படத்தின் மூன்று நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் வெளியாகி உள்ளது.

Lal Salaam

ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் திரைக்கு வந்துள்ள திரைப்படம் லால் சலாம். இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், நிரோஷா, ஜீவிதா, செந்தில், தங்கதுரை என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படம் கடந்த பிப்ரவரி 9-ந் தேதி திரைக்கு வந்தது. இதில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் கேமியோ ரோலில் நடித்திருந்தார். லைகா நிறுவனம் தயாரிப்பில் ரஜினி நடித்திருப்பதால் இப்படத்தின் பிசினஸும் பெரிய அளவில் இருந்தது.

Lal Salaam Box Office

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமன் இசையமைத்து இருந்த லால் சலாம் திரைப்படம் மத நல்லிணக்கம் பற்றியும் மனிதநேயத்தின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தும் விதமாக எடுக்கப்பட்டு இருந்தது. இப்படத்திற்கு பாசிடிவ் விமர்சனங்கள் கிடைத்தாலும் பாக்ஸ் ஆபிஸில் லால் சலாம் படத்துக்கு சுமார் கலெக்‌ஷனே கிடைத்துள்ளது. இப்படம் உலகளவில் மூன்று நாள் முடிவில் வெறும் ரூ.13 கோடி மட்டுமே வசூலித்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்... ராக்கி பாய்-ஐ போல் மாஸ் காட்டினாரா மொய்தீன் பாய்? லால் சலாம் படத்தின் விமர்சனம் இதோ

Lal Salaam Box Office Collection

அதிலும் இந்தியாவில் இதுவரை ரூ.10 கோடி கூட வசூல் வரவில்லையாம். இந்திய அளவில் முதல் நாளில் ரூ.3.55 கோடி வசூலித்து இருந்த இப்படம், இரண்டாவது நாளில் ரூ.3.25 கோடி வசூலை வாரிக்குவித்து இருந்தது. இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை இப்படத்தின் வசூல் பிக் அப் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்றைய நிலவரமும் சுமாராக தான் இருந்துள்ளது. அதன்படி நேற்று இப்படம் வெறும் ரூ.3 கோடி மட்டுமே வசூலித்து உள்ளது.

Lal Salaam 3 days Box Office Collection

இப்படி விடுமுறை தினங்களிலேயே லால் சலாம் படத்தின் வசூல் கம்மியாக இருப்பதால் இன்று முதல் வார நாட்களில் மேலும் சரிய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதே நிலை நீடித்தால் இப்படம் ரூ.25 கோடி தான் வசூலிக்கும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இப்படத்தின் பட்ஜெட்டே ரூ.40 கோடியாம். இதே நிலை நீடித்தால், அதை எட்டிப்பிடிப்பது மிகவும் கடினம் என்று கூறப்படுகிறது. இதன்மூலம் ஜெயிலர் நிகழ்த்திய பாக்ஸ் ஆபிஸ் மேஜிக்கை லால் சலாம் தவறவிட்டுள்ளது உறுதியாக தெரிகிறது.

இதையும் படியுங்கள்... காதலர் தின ஸ்பெஷலாக தமிழ்நாட்டில் ரீ-ரிலீஸாகும் பிளாக்பஸ்டர் ஹிட் காதல் படங்கள் - அதன் லிஸ்ட் இதோ

click me!