அட்டர் பிளாப் ஆன ஜப்பான்... அடுத்த படத்திற்காக காஸ்ட்லி வில்லன் உடன் கைகோர்க்கும் இயக்குனர் ராஜு முருகன்

First Published Feb 9, 2024, 10:21 AM IST

கார்த்தியின் ஜப்பான் படம் படுதோல்வி அடைந்ததை அடுத்து இயக்குனர் ராஜு முருகன் பிரபல வில்லன் நடிகருடன் கூட்டணி அமைத்துள்ளாராம்.

Raju Murugan

ஜோக்கர் படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக காலடி எடுத்து வைத்தவர் ராஜு முருகன். முதல் படத்திலேயே தேசிய விருது வென்ற அவர், அடுத்ததாக குக்கூ என்கிற வித்தியாசமான காதல் கதையை இயக்கினார். இப்படமும் விமர்சன ரீதியாக அமோக வரவேற்பை பெற்றது. இதன்பின்னர் ஜீவா நடித்த ஜிப்ஸி படத்தை இயக்கிய ராஜு முருகன், முதன்முறையாக மாஸ் நடிகருடன் இணைந்து பணியாற்றிய திரைப்படம் தான் ஜப்பான்.

Director Raju Murugan Next Movie

இப்படம் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு வந்தது. இப்படத்தை எஸ்.ஆர்.பிரபு தயாரித்து இருந்தார். மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட ஜப்பான் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. நடிகர் கார்த்தியின் கெரியரில் மிகப்பெரிய தோல்வி படமாக ஜப்பான் அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி இப்படத்தின் தோல்வியால் உச்சத்தில் இருந்த நடிகர் கார்த்தியின் மார்க்கெட் சட்டென சரிவை சந்தித்து உள்ளது.

இதையும் படியுங்கள்... காவாலாவுக்கே டஃப் கொடுக்கும் ஜப்பான் பட பாடல்... கார்த்தி பாடிய டச்சிங் டச்சிங் சாங் வீடியோ இதோ

Japan Movie Karthi

ஜப்பான் படத்தின் தோல்வியை தொடர்ந்து எப்படியாவது ஹிட் கொடுக்க வேண்டும் என்கிற முனைப்பில் 96 படத்தின் இயக்குனர் பிரேம் குமார் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. இதுதவிர நலன் குமாரசாமி இயக்கத்தில் ஒரு படம், எச்.வினோத் இயக்கத்தில் தீரன் இரண்டாம் பாகம், லோகேஷ் கனகராஜ் இயக்கும் கைதி 2 என கார்த்தி அடுத்தடுத்து லைன் அப்பில் படங்களை அடுக்கி வருகிறார்.

SJ Suryah

மறுபுறம் இயக்குனர் ராஜு முருகனுக்கு தற்போது அடுத்த பட வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன்படி அவர் இயக்க உள்ள புதிய படத்தில் நடிப்பு அரக்கன் எஸ்.ஜே.சூர்யா தான் நாயகனாக நடிக்க உள்ளார். ஜிப்ஸி, டாடா போன்ற படங்களை இயக்கிய அம்பேத்குமார் தான் இந்த படத்தையும் இயக்க உள்ளாராம். தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வரும் எஸ்.ஜே.சூர்யா உடன் கூட்டணி அமைத்துள்ளதால், ராஜு முருகன் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு சலாம்... வீல் சேரில் அமர்ந்திருக்கும் அன்சீன் புகைப்படத்துடன் ரஜினி வாழ்த்து

click me!