Ajith Photo: மருத்துவமனையில் இருந்து வந்த பின்னர் அஜித் எப்படி இருக்காருன்னு பாருங்க! வைரலாகும் புகைப்படம்!

First Published Mar 12, 2024, 10:35 PM IST

கடந்த சில தினங்களுக்கு முன்பு, முழு உடல் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்ற அஜித்துக்கு... மைனர் சர்ஜரி ஒன்று செய்யப்பட்ட நிலையில், இவரது லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவாக இருக்கும் அஜித், மற்றவர்கள் நலனில் மட்டும் அல்ல தன்னுடைய உடல் நலனிலும் அதிக அக்கறை கொண்டவர். பல கடினமான வேலைகளை கூட அசால்டாக செய்தாலும், அதற்கான முன்னெச்சரிக்கையுடன் இருப்பவர். ஆனால் எதிர்பாராத விதமாக சில சமயங்களில் விபத்துகளில் இவர் சிக்குவதும் உண்டு. 

ஏற்கனவே இவர் கார் ரேசில் ஈடுபட்டபோது முதுகு தண்டில் பலமான காயம் ஏற்பட்டு... அதற்காக சில அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது. அதே போல் ஷூட்டிங் ஸ்பாட்டிலும் பைக் ரேஸ் காட்சியில் கீழே விழுந்து சில விபத்துகளில் சிக்கி மீண்டுள்ளார். ஆக்சன் காட்சியில் டூப் போடாமல் நடிக்கும் பொதும் பல முறை இவருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது.

பாஜக அழைத்து உண்மை தான்..! இணையாததற்கு இது தான் காரணம்? திவ்யா சத்யராஜ் வெளியிட்ட வீடியோ!
 

ஒவ்வொரு வருடமும், முழு உடல் பரிசோதனை செய்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ள அஜித், கடந்த வாரம், இதற்காக அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றார். அப்போது அவரது காது பக்கத்தில் நரம்பில் புடைப்பு போல் இருப்பதை கண்டறிந்த மருத்துவர்கள் அதற்காக சின்ன மைனர் சர்ஜரி ஒன்றை செய்தனர். ஆனால் இதுகுறித்து பல்வேறு வதந்திகள் பரவி அஜித் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Thala Ajith

இதை தொடர்ந்து அஜித்தின் மேலாளர் உண்மையான விலக்காதை கொடுத்து இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார். மேலும் மருத்துவமனையில் இருந்து மறுதினமே டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அஜித், தன்னுடைய மகன் ஃபுட் பால் விளையாடியதை, நண்பர்கள் மற்றும் மனைவியுடன் சேர்ந்து பார்த்த வீடியோ வெளியானது. 

திருமண கோலத்தில்... கழுத்தில் தாலியோடு 'சிறகடிக்க ஆசை' சீரியல் நாயகி கோமதி பிரியா! வைரலாகும் போட்டோ!
 

இதை தொடர்ந்து தற்போது அஜித் தன்னுடைய மகன் ஆத்விக் பக்கத்தில் அமர்ந்திருக்கும் கிளாஸ் அப் புகைப்படம் வெளியாகி உள்ளது. இதை பார்த்த பின்னரே பல ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். அஜித் மார்ச் 15-ஆம் தேதி 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்புக்காக மீண்டும் அஜர்பைஜான் செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!