ஆதிபுருஷ் முதல் மாமன்னன் வரை... 2023-ம் ஆண்டு அதிகம் ட்ரோல் செய்யப்பட்ட தமிழ் படங்களின் லிஸ்ட் இதோ

First Published Dec 8, 2023, 12:00 PM IST

2023 ஆம் ஆண்டு வெளியான தமிழ் படங்களில் நெட்டிசன்களால் அதிகம் ட்ரோல் செய்யப்பட்ட தமிழ் படங்களின் லிஸ்ட்டை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Most trolled tamil movies 2023

சமூக வலைதளங்களின் வளர்ச்சியால் எந்த அளவுக்கு சினிமா நட்சத்திரங்களுக்கு பெயரும், புகழும் கிடைக்கிறதோ, அதே நேரத்தில் அவர்கள் ஏதாவது கிரிஞ்சாக செய்துவிட்டாலோ அல்லது சர்ச்சையில் சிக்கினாலோ அவர்களை ட்ரோல் செய்வதற்கென மீம் கிரியேட்டர்கள் எக்கச்சக்கம் உள்ளன. அந்த வகையில் 2023-ம் ஆண்டு வெளியான தமிழ் படங்களில் அதிகம் ட்ரோல் செய்யப்பட்ட படங்களைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

வாரிசு

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த திரைப்படம் வாரிசு. கடந்த ஜனவரி மாதம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆன இப்படம் அதிகம் ட்ரோல்களில் சிக்கியதற்கு காரணம் அதன் தயாரிப்பாளர் தில் ராஜு தான். அவர் வாரிசு பட இசை வெளியீட்டு விழாவில் பேசுகையில் இப்படத்தில் டான்ஸ் வேணுமா டான்ஸ் இருக்கு, ஃபைட்டு வேணுமா ஃபைட் இருக்கு என டி.ஆர் பாணியில் ரைமிங் ஆக பேசியதை மீம் டெம்பிளேட்டுகளாக மாற்றி நெட்டிசன்கள் வச்சு செய்தனர்.

ஆதிபுருஷ்

2023ல் இந்திய அளவில் அதிக கேலி கிண்டலுக்கு உள்ளான படம் என்றால் அது நிச்சயம் ஆதிபுருஷ் தான். ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ், கீர்த்தி சனோன் நடிப்பில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட இப்படம் மிகவும் ட்ரோல் செய்யப்பட்டதற்கு காரணம் இப்படத்திற்கு அவர்கள் கொடுத்த பில்டப் தான். ஆஹா ஓஹோனு சொல்லி கடைசியில் கார்ட்டூன் படத்தை எடுத்து வைத்துள்ளதாக நெட்டிசன்கள் ட்ரோல் செய்தனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

மாமன்னன்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த திரைப்படம் மாமன்னன். இப்படம் ஜூன் மாதம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி மாபெரும் வரவேற்பை பெற்றது. இப்படம் அதிகம் ட்ரோல்களில் சிக்கியதுக்கு காரணம் இதில் வில்லனாக நடித்த பகத் பாசிலின் கேரக்டரி தான். அந்த கேரக்டரை மாரி செல்வராஜ் வில்லனாக காட்டி இருந்த நிலையில், அதனை ஹீரோவாக்கி மீம் கிரியேட்டர்கள் கொண்டாடியது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சந்திரமுகி 2

தமிழ் சினிமாவில் கிளாசிக் ஹிட் படங்களுள் ஒன்று சந்திரமுகி, அப்படத்தின் இரண்டாம் பாகத்தை லாரன்ஸ் மற்றும் கங்கனா ரனாவத்தை வைத்து எடுத்திருந்தார் பி வாசு. இப்படம் கடந்த செப்டம்பர் மாதம் திரைக்கு வந்தது. இதில் இடம்பெற்ற கிராபிக்ஸ் காட்சிகளும், சந்திரமுகியாக நடித்த கங்கனாவின் நடிப்பு கிரிஞ்சாக இருந்ததாக கூறி நெட்டிசன்கள் கடுமையாக ட்ரோல் செய்தனர்.

லியோ

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு அதிக வசூலை வாரிக்குவித்த தமிழ் படங்களில் லியோவும் ஒன்று. இப்படம் சுமார் 600 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தாலும் இதுவும் ட்ரோல்களில் சிக்கியது. இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்ததை அடுத்து இதில் வரும் பிளாஷ்பேக் உண்மை இல்லை என லோகேஷ் கனகராஜ் கூறியதை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வச்சு செய்தனர்.

இதையும் படியுங்கள்... லியோ பாணியில்... ஷூட்டிங் தொடங்கும் முன்பே ரிலீஸ் தேதியோடு வெளிவந்த யாஷின் அடுத்த பட டைட்டில்

click me!