Latest Videos

Varalaxmi : வரலட்சுமிக்கு கல்யாணம்.. தடபுடலான ஏற்பாடுகள்.. திருமணம் தாய்லாந்திலா? அப்பா போடும் பிளான் என்ன?

First Published Jun 11, 2024, 10:53 PM IST

Actress Varalaxmi Sarathkumar : கடந்த மார்ச் 2ம் தேதி நிக்கோலை சச்தேவ் என்பவருடன் பிரபல நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது.

Stalin

தந்தையும், சித்தியும் கோலிவுட் உலகில் மிகப்பெரிய நடிகர் நடிகைகளாக வலம் வந்து கொண்டிருந்த பொழுதும் திரைத்துறை பக்கம் வராமல் படிப்பில் அதிக அளவில் கவனம் செலுத்தி வந்த நடிகை தான் வரலட்சுமி சரத்குமார். ஆனால் ஒரு கட்டத்தில் சினிமாவின் மீது ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாக கடந்த 2012 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் அறிமுக இயக்குனராக களமிறங்கிய "போடா போடி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக களமிறங்கினார் வரலட்சுமி சரத்குமார். 

kanimozhi

கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழில் இவர் நடித்த இரண்டாவது திரைப்படம் தான் "தாரை தப்பட்டை", சூரவல்லி என்கின்ற அந்த கதாபாத்திரம் வரலட்சுமி சரத்குமாரின் மீது இருந்த பார்வையை முற்றிலும் மாற்றியது. மிகச்சிறந்த நடிகையாக கோலிவுட் உலகம் அவரை ஏற்றுக் கொண்டது. 

கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நடித்து வந்த வரலட்சுமி, விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக அறிவித்தார். அதே போல நிக்கோலை சச்தேவ் என்பவரை கடந்த மார்ச் மாதம் நிச்சயமும் செய்து கொண்டார்.

kamal haasan

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமலஹாசன், சந்திரபாபு நாயுடு என்று திரைத்துறையினர் பலருக்கும் அரசியல் பிரபலங்கள் பலருக்கும் கல்யாண பத்திரிக்கைகள் வைக்கப்பட்டது. இந்த நிலையில் 39 வயது நிரம்பிய வரலட்சுமியின் திருமணம் தாய்லாந்து நாட்டில் நடக்க உள்ளதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது. 

Rajini

அங்கேயே அவர்களுடைய திருமணத்தின் வரவேற்பும் நடக்க உள்ள நிலையில் சென்னையில் உள்ள பிரபலங்களுக்காக இங்கும் ஒரு வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த உள்ளதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது. இருப்பினும் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதையும் வரலட்சுமி தந்தை சரத்குமார் அவர்கள் இன்று வரை வெளியிடவில்லை.

Vijay Devarakonda: ஜாதகத்தின் படி பெயரை மாற்றுகிறாரா விஜய் தேவரகொண்டா! பரபரப்பு முடிவுக்கு காரணம் என்ன?

click me!