Abbas : கமல்ஹாசனோட பேவரைட் பைக் இதுதானாம்... நியூசிலாந்தில் தேடிக் கண்டுபிடித்த நடிகர் அப்பாஸ்

Published : Jun 18, 2024, 09:24 AM IST
Abbas : கமல்ஹாசனோட பேவரைட் பைக் இதுதானாம்... நியூசிலாந்தில் தேடிக் கண்டுபிடித்த நடிகர் அப்பாஸ்

சுருக்கம்

கமல்ஹாசனுக்கு மிகவும் பிடித்த விண்டேஜ் பைக்கை நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்தில் தேடிக் கண்டுபிடித்ததாக நடிகர் அப்பாஸ் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

1990-களில் தமிழ் சினிமாவில் ரொமாண்டிக் ஹீரோவாக வலம் வந்தவர் அப்பாஸ். காதல் தேசம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், மின்னலே, படையப்பா, ஆனந்தம் என வரிசையாக ஹிட் படங்களில் நடித்த அப்பாஸ், ஒரு கட்டத்தில் ஆள் அட்ரஸே தெரியாமல் காணாமல் போனார். கடைசியாக 2014-ம் ஆண்டு வெளிவந்த ராமானுஜன் திரைப்படத்தில் நடித்த அப்பாஸ், கடந்த 2015-ம் ஆண்டு குடும்பத்துடன் நியூசிலாந்துக்கு குடியேறினார்.

அங்கு பிசினஸ் செய்துவரும் அப்பாஸ், கடந்த ஆண்டு சென்னை வந்தபோது சினிமாவில் மீண்டும் கம்பேக் கொடுக்க உள்ளதாக கூறி இருந்தார். இதனிடையே அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளதாகவும் பேச்சு அடிபட்டது. ஆனால் அது வெறும் வதந்தி என பின்னர் தெரியவந்தது. தற்போது நியூசிலாந்தில் செட்டிலாகிவிட்ட அப்பாஸ், தற்போது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

இதையும் படியுங்கள்... பெரிய ஹீரோ வச்சு படம் பண்ணியே எஸ்கேப் ஆகுறாரு.. முடிஞ்சா இவர வச்சு ஹிட் கொடுங்க! அட்லீக்கு சவால் விட்ட பிரபலம்

அந்த வீடியோவில் கமல்ஹாசனுக்கு மிகவும் பிடித்த பைக்கை தான் ஆக்லாந்தில் தேடிக் கண்டுபிடித்ததாக கூறி இருக்கிறார். ஆக்லாந்தில் உள்ள பைக் ஷோரூம் ஒன்றிற்கு சென்றிருந்த அப்பாஸ், அங்கு பி.எஸ்.ஏ பைக்குகளை பார்த்ததும் கமல்ஹாசன் தான் தனக்கு நினைவில் வந்ததாக கூறி இருக்கிறார். ஏனெனில் அது கமல்ஹாசனுக்கு மிகவும் பிடித்த பைக்காம்.

மேலும் கமலிடமும் ஒரு பிஎஸ்ஏ பைக் இருப்பதாக கூறிய அப்பாஸ், இங்கும் நிறைய பைக்குகள் இருக்கிறது, நீங்கள் இங்கு வந்தால் ரைடு செய்யலாம் என கூறி இருக்கிறார். அப்பாஸ் வெளியிட்டுள்ள இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது. நடிகர் அப்பாஸ் கமல்ஹாசன் உடன் இணைந்து ஹேராம், பம்மல் கே சம்மந்தம் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்...  ஆகஸ்டில் இருந்து டிசம்பருக்கு தாவிய அல்லு அர்ஜுன்; ஒரே அடியாக தள்ளிவைக்கப்பட்ட புஷ்பா 2 - புது ரிலீஸ் தேதி இதோ

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?