சிம்புவுக்காக தனுஷின் ஆடுகளம் படத்தில் இருந்து பாதியில் விலகினாரா திரிஷா? இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே

First Published Mar 5, 2024, 3:35 PM IST

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா, சிம்புவுக்காக தனுஷின் ஆடுகளம் படத்தில் இருந்து விலகிய தகவல் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

Aadukalam Trisha

நடிகர் தனுஷின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படங்களில் ஆடுகளமும் ஒன்று. வெற்றிமாறன் இயக்கிய இப்படம் கடந்த 2011-ம் ஆண்டு திரைக்கு வந்தது. இப்படத்திற்கு மொத்தம் ஆறு தேசிய விருதுகள் கிடைத்தது. நடிகர் தனுஷுக்கு முதன்முறையாக தேசிய விருது கிடைத்ததும் இப்படத்தின் மூலம் தான். அதுமட்டுமின்றி சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை, சிறந்த படத்தொகுப்பு மற்றும் சிறந்த படத்துக்கான ஜூரி விருது ஆகியவையும் ஆடுகளத்துக்கு கிடைத்தது.

Aadukalam dhanush trisha

ஆடுகளம் திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக டாப்ஸி நடித்திருந்தார். அவர் நடித்த ஐரின் கதாபாத்திரத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குனர் வெற்றிமாறன் முதலில் தேர்வு செய்தது நடிகை திரிஷாவை தான். அவர் கமிட்டாகி இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பாதி காட்சியில் நடித்து முடித்துவிட்டார். ஆனால் அதன்பின்னர் கால்ஷீட் பிரச்சனை ஏற்பட்டதால் அவர் இப்படத்தில் இருந்து விலகிவிட்டார்.

இதையும் படியுங்கள்... 'குணா' படத்திற்கு பின் ரோஷ்ணி நடிக்காதது ஏன்? 32 வருடங்களுக்கு பின் இயக்குனர் சந்தானபாரதி வெளியிட்ட தகவல்!

Trisha quit Aadukalam

அதன்பின்னர் தான் திரிஷாவுக்கு பதில் டாப்ஸியை ஹீரோயினாக நடிக்க வைத்துள்ளார் வெற்றிமாறன். நடிகை திரிஷா, ஆடுகளம் படத்தில் இருந்து விலகியதற்கு காரணம் சிம்புவின் விண்ணைத்தாண்டி வருவாயா படம் தானாம். அப்படத்திலும், ஆடுகளம் படத்திலும் ஒரே நேரத்தில் நடித்து வந்த திரிஷாவுக்கு, ஒரு கட்டத்தில் ஏதேனும் ஒரு படத்துக்கு தான் கால்ஷீட் கொடுக்க முடியும் என்கிற சூழல் வந்தபோது அவர் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை தேர்வு செய்திருக்கிறார்.

VTV

அவரின் இந்த தேர்வும் சரியானது தான். ஆடுகளம் படத்தில் ஐரின் கேரக்டருக்கு கம்மியான காட்சிகள் தான் இருக்கும், ஆனால் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் முழுக்க முழுக்க வரும்படியான கேரக்டர் என்பதால் அவர் ஆடுகளத்திற்கு நோ சொல்லிவிட்டாராம். அவர் அந்த முடிவை எடுக்கவில்லை என்றால் இன்று கொண்டாடப்படும் ஜெஸ்ஸி கேரக்டர் திரிஷாவுக்கு கிடைத்திருக்காது என்பது தான் நிதர்சனமான உண்மை. ஆடுகளம் படத்தில் தனுஷும், திரிஷாவும் நடித்தபோது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின்றன.

இதையும் படியுங்கள்... சிம்புவை கழட்டிவிட்டு... ராட்சச நடிகருடன் ஆரம்பமாகும் கொரோனா குமார் - ஷூட்டிங் அப்டேட் இதோ

click me!