கிலோ கணக்கில் தங்க நகைகளை கொண்டு சென்ற வேன் அதிகாலை நேரத்தில் விபத்தில் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தங்கத்திற்கான ஆவணங்கள் சரியாக இருந்த காரணத்தால் போலீசார் நகைகளை பாதுகாப்பாக மீட்டு மற்றொரு வாகனத்தி்ல் அனுப்பி வைத்தனர்.
810 கிலோ தங்கத்துடன் கவிழ்ந்த வேன்
கோவை மாவட்டத்தில் இருந்து சேலம் நோக்கி `செக்யூல் லாஜிஸ்டிக்' என்ற நிறுவனத்தின் வேன் கடந்த 6ஆம் தேதி 810 கிலோ தங்கத்தோடு வேன் சென்று கொண்டிருந்தது. இந்த வேன் கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியில் சென்றபோது, வளைவில் திரும்பிய போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையில் கவிழ்ந்தது. இதில் ஓட்டுநர் சசிகுமார் மற்றும் பாதுகாவலர் பால்ராஜ் காயம் அடைந்தனர். தங்க நகைகளோடு வேன் விபத்துக்குள்ளானது தொடர்பான தகவல் கிடைத்த நிலையில் நகைக்கடையின் உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.விபத்து நடைபெற்ற இடத்தில் பொதுமக்களும் அதிகளவில் சூழ்ந்தனர். அப்போது விபத்தில் சிக்கியவர்களை மீட்ட அப்பகுதி மக்கள் முதலுதவி சிகிச்சை மேற்கொண்டனர்.
undefined
தங்க நகைகளை மீட்ட போலீசார்
இதற்கிடையே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த நிலையில், விபத்திற்குள்ளன வேனில் ரூ.666 கோடி மதிப்புடைய 810 கிலோ தங்கம் இருப்பதை தெரிவித்துள்ளனர். இதனால் ஷாக் ஆன போலீசார் அந்த பகுதியில் கூடியிருந்த மக்களை அப்புறப்படுத்தினர். விபத்தில் வேன் கவிழ்தாலும் தங்க நகைகள் பாதுகாப்பாக பெட்டியில் வைக்கப்பட்டதால் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. இதனையடுத்து வணிக வரித்துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு நகைகளுக்கான பில்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டது. அதில், அனைத்து நகைகளுக்கும் பில் இருப்பது தெரியவந்தது.பின்னர், மற்றொரு வாகனத்தில், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன், , சேலத்துக்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டது
Local Holiday : நாளை விடுமுறை.. வெளியான முக்கிய அறிவிப்பு..! என்ன காரணம் தெரியுமா?