E PASS : ஊட்டிக்கு இ பாஸ்... ஒரே நாளில் இத்தனை பேர் பதிவு செய்துள்ளார்களா.? மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட தகவல்

By Ajmal Khan  |  First Published May 9, 2024, 8:41 AM IST


ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு இ பாஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ஓட்டல் உரிமையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில்  நேற்று வரை மட்டும் 25 ஆயிரத்து 057 வாகனங்களில் 1 லட்சத்து, 22 ஆயிரத்து 147 பேர் சுற்றுலா மற்றும் வணிகரீதியாக நீலகிரிக்கு வர இ-பாஸ் பதிவு செய்துள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது. 
 


இ பாஸ் திட்டம் அமல்

வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதாலும், பள்ளி விடுமுறை காரணத்தாலும் குடும்பத்தோடு சுற்றுலாவிற்கு மக்கள் செல்ல தொடங்கியுள்ளனர். அந்த வகையில் ஒரே நேரத்தில் அதிகளவில் மக்கள் ஊட்டி மற்றும் கொடைக்கானல் பகுதிக்கு வருவதால் போக்குவரத்து நெரிசல் மற்றும் சுற்று சூழல் பாதிப்பு ஏற்படுவதாக நீதிமன்றத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சுற்றுலா பயணிகளின் வருகையை கணக்கெடுக்கும் வகையிலும், கட்டுப்பாடுகள் விதிக்கும் வகையில் இ பாஸ் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் மே 7ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை இ பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

Tap to resize

Latest Videos

சுற்றுலா பயணிகள் வருகை

இந்தநிலையில் நேற்று முன் தினம் முதல் இ பாஸ் கட்டாயமாக்கப்பட்ட நிலையில், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக கொடைக்கானல் ஓட்டல் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். எனவே இ பாஸ் நடைமுறையை தளர்த்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர். ஆனால் மாவட்ட நிர்வாகமோ இ பாஸ் கேட்கும் அனைவருக்கும் வழங்கப்பட்டு வருவதாகவும், இது சுற்றுலா பயணிகளின் வருகையை கணக்கெடுக்க ஒரு முயற்சி என தெரிவிக்கப்பட்டது.  இந்தநிலையில், நீலகிரிக்கு வருகை புரிய நேற்று  மாலை வரை 58 ஆயிரத்து 983 வாகனங்களுக்கு இ-பாஸ் பெற்று 3 லட்சத்து 17 ஆயிரத்து 102 சுற்றுலா பயணிகள் வருகை புரிய அனுமதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 
இ பாஸ் பெற்றவர்கள் எத்தனை பேர்.?

மேலும் நேற்று வரை மட்டும் 25 ஆயிரத்து 057 வாகனங்களில் 1 லட்சத்து, 22 ஆயிரத்து 147 பேர் சுற்றுலா மற்றும் வணிகரீதியாக நீலகிரிக்கு வர இ-பாஸ் பதிவு செய்துள்ளனர். நேற்று மாலை 6 மணி வரை 4 ஆயிரத்தி 547 வாகனங்களில் சுமார் 20 ஆயிரத்து 651 சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு வருகை புரிந்து சென்றுள்ளனர் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊட்டி, கொடைக்கானலுக்கு டூர் போறீங்களா.? கிளைமேட் எப்படி இருக்கு.? வெயிலா.? கூலிங்கா.? இதோ லேட்டஸ்ட் அப்டேட்
 

click me!