சித்தியுடன் பிக் பாஸ்.. என்ட்ரி கொடுக்கப்போகிறாரா ஜோவிகா? - இன்ஸ்டா பதிவில் மகளை வாத்திய வனிதா விஜயகுமார்!

First Published Sep 7, 2023, 8:50 PM IST

முன்பு எப்போதும் இல்லாத அளவில் இம்முறை நடக்கவிருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி காண எதிர்பார்ப்பு உச்சத்தை தொட்டு உள்ளது என்றால் அது மிகையல்ல. மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போகும் போட்டியாளர்கள் யார் யார் என்று தெரிந்து கொள்ள மக்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.

Big Boos Season 7 Tamil Contestants

உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பரவலாக அதிக ரசிகர்கள் உண்டு. குறிப்பாக இந்த முறை, இரண்டு வீடுகள் கொண்டு பிக் பாஸ் சீசன் 7 நடத்தபட உள்ளது மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோலிவுட்டை நம்பி கிளீன் போல்டான 5 கிரிக்கெட் வீரர்கள்! தல தோனிக்கு தான் சேதாரம் ஜாஸ்தி பாஸ்!

Sridevi vijayakumar

ஏற்கனவே இந்த பிக் பாஸ் சீசன் 7ல் 90 கிட்ஸ் மனம் கவர்ந்த நாயகி ஸ்ரீதேவி விஜயகுமார் போட்டியாளராக பங்கேற்க உள்ளார் என்கின்ற தகவல்கள் அப்போது வெளியாக வருகிறது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்றளவும் எதுவும் வெளியாகவில்லை.

Actress Sridevi

இந்நிலையில் இந்த பிக் பாஸ் சீசனில், இரண்டு வீடுகள் இருக்கப் போகிறது என்ற அறிவிப்பால் மக்களின் ஆர்வம் அதிகரித்துள்ள நிலையில், பிக் பாஸ் வீட்டிற்குள் நடிகர் விஜயகுமார் வீட்டில் இருந்து இன்னொரு முக்கிய நபரும் போட்டியாளராக களமிறங்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது.

பிரபல நடிகை வனிதா விஜயகுமார் வெளியிட்டுள்ள ஒரு இன்ஸ்டாகிராம் பதிவில் "என் உலக அழகி ஜோவிகாவே, உன்னை நான் காதலிக்கிறேன், நீ என்ன செய்தாலும், கடவுள் அருள் உன்னிடம் நிறைந்திருக்கும்" என்று தனது பதிவில் எழுதியுள்ளார். இதனால் சித்தி ஸ்ரீதேவியுடன் இணைந்து ஜோவிகாவும் விஜயகுமார் அவர்களும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் களமிறங்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

கோடி கோடியாய் குவிக்கும் ரஜினியின் ஜெயிலர்.. அள்ளி அள்ளி தானம் செய்யும் சன் குடும்பம் - காவேரி கொடுத்த செக்!

click me!