காதலர் தினத்தை ஒட்டி புது பிசினஸில் காலடி எடுத்து வைக்கும் ‘புன்னகை அரசி’ சினேகா - குவியும் வாழ்த்துக்கள்

First Published Feb 8, 2024, 10:09 AM IST

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த சினேகா, காதலர் தினத்தையொட்டி புது பிசினஸ் ஒன்றை தொடங்க உள்ளார்.

Sneha

மாதவனின் என்னவளே படம் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானவர் சினேகா. இதையடுத்து லிங்குசாமி இயக்கத்தில் இவர் நடித்த ஆனந்தம் திரைப்படம் சினேகாவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்தில் அப்பாஸுக்கு ஜோடியாக நடித்த சினேகா, தன்னுடைய அழகிய சிரிப்பால் ரசிகர்களை கவர்ந்ததால் இவருக்கு புன்னகை அரசி என்கிற பெயரும் கிடைத்தது. ஆனந்தம் படத்தின் வெற்றிக்கு பின்னர் சினேகாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.

Actress Sneha

இதையடுத்து சூர்யா உடன் உன்னை நினைத்து, கமலின் பம்மல் கே சம்பந்தம், விஜய் ஜோடியாக வசீகரா, அஜித்துடன் ஜனா என அனைத்து முன்னணி டாப் ஹீரோக்களுடனும் அடுத்தடுத்து ஜோடி சேர்ந்து நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். இவர் நடிப்பில் கடந்த 2009-ம் ஆண்டு வெளிவந்த அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படம் சினேகாவின் வாழ்க்கையில் மறக்கமுடியாத படமாக அமைந்தது. ஏனெனில் இப்படத்தின் போது தான் சினேகாவுக்கும் பிரசன்னாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது.

இதையும் படியுங்கள்... காதலுக்கு வயசு முக்கியம் இல்லையாம் பாஸ்... தன்னைவிட வயதில் மூத்த பெண்களை கரம்பிடித்து செட்டில் ஆன டாப் ஹீரோஸ்

Sneha New business

இதையடுத்து மூன்று ஆண்டுகள் உருகி உருகி காதலித்த இந்த ஜோடி கடந்த 2012-ம் ஆண்டு குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். இந்த ஜோடிக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது. குழந்தைகள் வளர்ந்துவிட்டதால் தற்போது மீண்டும் சினிமாவில் தன்னுடைய செகண்ட் இன்னிங்ஸை தொடங்கி இருக்கிறார் நடிகை சினேகா. இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் படத்தில் நடிகர் விஜய்யுடன் நடித்து வருகிறார்.

sneha's Snehalayaa silks

இதுதவிர ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் நடன நிகழ்ச்சியில் நடுவராகவும் பணியாற்றி வரும் சினேகா, தற்போது புது பிசினஸ் ஒன்றில் காலடி எடுத்து வைத்துள்ளார். அதன்படி சினேகாலயா சில்க்ஸ் என்கிற துணிக்கடை ஒன்றை புதிதாக திறக்க உள்ளார் சினேகா. இதன் திறப்பு விழா வருகிற பிப்ரவரி 12-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அழைப்பிதழை பிரபலங்களுக்கு அனுப்பி வைத்துள்ளார் சினேகா. இதைப்பார்த்த ரசிகர்கள் சினேகாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... சந்திரமுகி 2 தோல்விக்கு பின்... பிக்பாஸ் டைட்டில் வின்னருக்கு ஜோடியாக நடிக்க கமிட் ஆன லட்சுமி மேனன்!

click me!