சொத்து அபகரிப்பு வழக்கில் திடீர் ட்விஸ்ட்... கவுண்டமணியின் 20 வருட சட்ட போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி

Published : May 14, 2024, 01:40 PM IST
சொத்து அபகரிப்பு வழக்கில் திடீர் ட்விஸ்ட்... கவுண்டமணியின் 20 வருட சட்ட போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி

சுருக்கம்

சென்னை ஆற்காடு சாலையில் உள்ள நடிகர் கவுண்டமணியின் நிலத்தை மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.

1980-களில் தமிழ் சினிமாவில் டாப் காமெடி நடிகராக வலம் வந்தவர் கவுண்டமணி. கிட்டத்தட்ட ஹீரோக்களுக்கு இணையாக சம்பளம் வாங்கிய இவர், கடந்த 1996-ஆம் ஆண்டு கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் நளினி பாய் என்பவருக்கு சொந்தமான 5 கிரவுண்டு மற்றும் 454 சதுர அடி நிலத்தை கிரையம் செய்து, அங்கு வணிக வளாக கட்டிடம் ஒன்றை கட்ட திட்டமிட்டார்.

அதன்படி ஸ்ரீ அபிராமி பவுண்டேஷன் என்கிற கட்டுமான நிறுவனத்திடம் அந்த இடத்தை ஒப்படைத்த கவுண்டமணி 22,700 சதுர அடி பரப்பளவில் வணிக வளாகம் ஒன்றினை 15 மாதங்களில் கட்டி முடித்து தர வேண்டும் என்கிற நிபந்தனையுடன், ரூ.3.58 கோடியை கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் கட்டிக் கொடுக்காமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்த அந்நிறுவனம் சொன்னபடி கட்டிமுடிக்கவில்லை. இதனால் 2004 ஆம் ஆண்டு முழுமையாக கட்டுமான பணிகள் கைவிடப்பட்டது. 

இதையும் படியுங்கள்.... Nayanthara: காத்து வாக்கில் கதை பேசிக்கொண்டு.. நயன் காதில் பூ வைத்த விக்கி! வைரலாகும் மிட் நைட் போட்டோஸ்!

இதையடுத்து கவுண்டமணி தரப்பில் இருந்து கேட்டபோது கட்டுமான நிறுவனத்தினர் வலுக்கட்டாயமாக வளாகத்திற்குள் நுழைந்து சில அடியாட்களை அங்கு வர வைத்து இடத்தை கையகப்படுத்த முயன்றதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்திற்கு எதிராகவும், சொத்தை மீட்டு தரக் கோரியும் கவுண்டமணி தரப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் கவுண்டமணிக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. மேலும் உரிமையின்றி சொத்தை ஆக்கிரமித்துள்ளதால், கவுண்டமணிக்கு இழப்பீடு வழங்கவும் கட்டுமான நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே நடிகர் கவுண்டமணியின் நிலத்தை மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ஸ்ரீ அபிராமி பவுண்டேசன் கட்டுமான நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. ஆனால் உச்சநீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதையும் படியுங்கள்.... ஜெயம் ரவி மனைவியா இது? சினிமா ஹீரோயின் போல் சேலையில் செம்ம அழகாக இருக்கும் ஆர்த்தியின் அல்டிமேட் கிளிக்ஸ்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

நாக சைதன்யாவை பற்றி அப்போது தெரியாது: அமலா உருக்கம்!
பெத்த மகள் என்று கூட பார்க்காமல் துப்பாக்கியை காட்டி எமோஷனல் பிளாக்மெயில் செய்த சாமுண்டீஸ்வரி!