
தற்போதைய காலக்கட்டத்தில் பல படங்கள் பான் இந்தியா அளவில் வெற்றி பெற்று கோடிக்கணக்கில் வசூலை குவித்து வருகின்றன. பாகுபலி 2, ஆர்.ஆர்.ஆர்., கேஜிஎஃப் 2, ஜவான், பதான், டங்கல் ஆகிய படங்கள் 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளன. இன்றைய காலக்கட்டத்தில் கூட1000 கோடி வசூல் என்பது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
ஆனால் 1960களிலேயே ஒரு படம் 1200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் உண்மை தான். எம்.ஜி.ஆரின் அடிமைப்பெண் படம் அந்த படம். நாடகங்களில் இருந்து சினிமாவுக்கு வந்த எம்.ஜி.ஆர், 30 ஆண்டுகளுக்கு மேல் சினிமாவில் கோலோச்சியவர்.
குறிப்பாக 1960,70களில் எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான பல படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றன. திரை உலகில் வசூல் சக்ரவர்த்தியாக எம்.ஜி.ஆர் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்துள்ளார்.
1969-ம் ஆண்டு எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, அசோகன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியான படம் அடிமைப் பெண். கே. சங்கர் இயக்கிய இந்த படத்தை எம்.ஜி.ஆர், ஆர்.எம்.வீரப்பன் ஆகியோர் தயாரித்திருந்தனர். இந்த படம் திரையரங்குகளில் 175 நாட்களுக்கு மேல் ஓடி பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. கே.வி மகாதேவன் இசையமைப்பில் உருவான பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டி எங்கும் சூப்பர் ஹிட் ஆனது.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் முதன் முதலில் பாடிய ஆயிரம் நிலவே பாடல் இந்த படத்தில் இடம்பெற்றது தான். அதே போல் அம்மா என்றால் அன்பு என்ற பாடல் இடம்பெற்றதும் இந்த படத்தில் தான். தாயில்லாமல் நானில்லை என்ற பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனது.
அந்த காலக்கட்டத்திலேயே இந்த படம் ரூ.2 கோடியே 50 லட்சம் வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. அதாவது இன்றைய மதிப்பில் அது ரூ.1200 கோடிக்கும் மேல் இருக்குமாம். இந்த படம் ரூ. 50 லட்சம் பட்ஜெட்டில் உருவானது. அன்றைய காலக்கட்டத்தில் டிக்கெட் விலை வெறும் 30 பைசால் இருந்து 1 ரூபாய் வரை மட்டுமே இருந்தது. ஆனால் இந்த படம் தமிழ்நாடு முழுவதும் 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.