Hansika Christmas Special: சுஸர்லாந்தில் கணவருடன் ரொமான்டிக்காக கிறிஸ்துமஸ் கொண்டாடிய ஹன்சிகா! வைரல் போட்டோஸ்!

First Published Dec 25, 2023, 8:36 AM IST

நடிகை ஹன்சிகா வெகேஷனுக்காக சுஸர்லாந்து சென்றுள்ள நிலையில், இவரின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
 

பாலிவுட் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக நுழைந்து, பின்னர் கதாநாயகியாக உயர்ந்தவர் பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானி. தமிழில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக 'மாப்பிள்ளை' படத்தில் கடந்த 2011-ஆம் ஆண்டு அறிமுகமான இவர், இதை தொடர்ந்து அதே ஆண்டு... ஜெயம் ரவிக்கு ஜோடியாக 'எங்கேயும் காதல்', விஜய்க்கு ஜோடியாக 'வேலாயுதம்' ஆகிய படங்களில் நடித்தார்.

மிக  குறுகிய காலத்தில், முன்னணி இளம் நடிகையாக மாறிய ஹன்சிகா... தமிழில் அடுத்தடுத்து ஆர்யா, சிவகார்த்திகேயன், கார்த்தி போன்ற பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.

கிட்னி கிடைச்சும் பலன் இல்லை... போண்டா மணி மரணத்தின் அதிர்ச்சி பின்னணி! பயில்வான் ரங்கநாதன் கூறிய தகவல்!

வாலு படத்தில் நடிக்கும் போது... பிரபல நடிகர் சிம்புவின் காதல் வலையில் விழுந்த இவர், அவருடன் டேட்டிங் செய்த சில மாதங்களில் விரைவில் திருமணம் நடைபெறும் என்கிற தகவல் வெளியானது. ஆனால்... இந்த காதல் பிரேக்கப்பில் முடிந்தது.

காதல் முறிவுக்கு பின்னர் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்த ஹன்சிகா... பப்ளி நடிகை என விமர்சிக்கப்பட்ட நிலையில், அதிரடியாக தன்னுடைய உடல் எடையை பாதியாக குறைத்தார். தற்போது ஸ்லிம் ஃபிட் நடிகையாக மாறி காட்சியளிக்கும் ஹன்சிகாவின் கைவசம் ஏராளமான படங்கள் உள்ளது.

Sobhita: மச்சம் தெரியும் அளவுக்கு செம்ம கிளோஸப்பில்... சேலை கட்டிய சிலை போல் போஸ் கொடுத்த சோபிதா துளிபாலா!

தமிழ் - தெலுங்கு ஆகிய மொழிகளில் பிசியாக நடித்து கொண்டிருக்கும் போதே... தன்னுடைய நீண்ட நாள் நண்பரான சோஹைல் கதூரியா என்பவரை கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்னர் அடிக்கடி கணவருடன் வெளிநாடு செல்வதை வழக்கமாக வைத்துள்ள இவர்... தற்போது, கணவருடன் சுஸர்லாந்து நாட்டிற்கு வெகேஷன் சென்றுள்ளார். கிறிஸ்துமஸை அந்த நாட்டில் கொண்டாடிய இவரின் போட்டோஸ் தற்போது வைரலாகி வருகிறது.

ரவீனாவுக்கு ஸ்டோர் ரூமில் காத்திருந்த இன்ப அதிர்ச்சி!! கமல் கொடுத்த சர்பிரைஸ்... கண்ணீர் விட்ட தருணம்!

ஹன்சிகாவின் இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் லைக்குகள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது. அதே போல் ரசிகர்கள் பலர் தங்களின் கிருஸ்துமஸ் வாழ்த்துக்களையும் இந்த அழகு தேவதைக்கு தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!