Thalapathy 67 Update: தளபதி 67ல் விஜய்யின் ரோல் இப்படிப்பட்டதாம்...மாஸ் நாயகனுக்கு இதெல்லாம் செட் ஆகுமா..?

First Published Jun 19, 2022, 11:19 AM IST

Thalapathy 67 Update: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் இணைந்துள்ள தளபதி 67 படத்தின் புதிய அப்டேட் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

Lokesh kanagaraj

பீஸ்ட் படத்திற்கு பிறகு நடிகர் விஜய் நடிப்பில், வம்சி இயக்கத்தில் தற்போது தளபதி 66 திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேசன்ஸ் சார்பாக தில் ராஜு இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்க உள்ளார். 

Lokesh kanagaraj

இந்த படத்தின் மூலம்  நடிகர் விஜய் டோலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. இதன் அப்டேட்டுகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில், தளபதி விஜய் பிறந்தநாளில் தளபதி 66 பர்ஸ்ட் லுக் வெளிவரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். 

இதையடுத்து, விஜய் அடுத்ததாக, லோகேஷ் கனகராஜ்  இயக்கத்தில் தளபதி 67 படத்தில் கைகோர்க்கவுள்ளார். இந்த தகவலை சமீபத்தில் லோகேஷ் உறுதி செய்ததால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். தற்போது தளபதி 66-யை விட எல்லோர் எதிர்ப்பார்ப்பும் தளபதி 67 மீது தான், ஏனெனில் கைதி படத்தை தொடர்ந்து தளபதி விஜய்யுடன் கைகோர்த்த லோகேஷ் மாஸ்டர் எனும் சூப்பர் ஹிட் வெற்றிப்படத்தை கொடுத்தார்.

இதன்பின், உலகநாயகனை வைத்து விக்ரம் படத்தை இயக்கினார். இப்படம் சமீபத்தில் வெளியாகி ஹிமாலய உச்சத்தை வசூலில் தொட்டுள்ளது.தொடர்ந்து நான்கு படத்திலும் வெற்றியை பதித்துள்ள லோகேஷ் கனகராஜ் தளபதி 67 படத்தில் இணைத்துள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

Lokesh kanagaraj

இந்த நிலையில், புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி, இப்படம் ஒரு கேங்ஸ்டர் கதையம்சம் கொண்டது என கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. அதோடு விஜய்  இந்த படத்தில்,தன்னுடைய நிஜ வயது கதாபாத்திரத்திலே படத்திலும் நடிப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்து படக்குழுவிடம் இருந்து முழு அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாக இருக்கிறது. 

 மேலும் படிக்க ...Thalapathy: விக்ரம் படம் தந்த மவுசு..தளபதி 67 படத்தில் எகிறிய லோகேஷின் சம்பளம்..அதுவும், எத்தனை கோடி தெரியுமா

click me!