ஒரே நேரத்தில் டபுள் சந்தோசம்.. Rotterdam நகரில் கெத்தாக நிற்கும் நாயகன் - திரையிடப்படும் சூரியின் இரு படங்கள்!

First Published Jan 30, 2024, 7:21 PM IST

Soori in Rotterdam : சூரி நடிப்பில் உருவான இரண்டு படங்கள் நெதர்லாந்தில் உள்ள Rotterdam என்ற நகரில் நடக்கும் பன்னாட்டு திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளது.

Actor Soori

துணை நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, அதன் பிறகு மிகப்பெரிய காமெடி நடிகராக உருவெடுத்து, இப்பொழுது ஒரு ஆக்சன் ஹீரோவாக தன்னைத்தானே உருவாக்கிக் கொண்டுள்ளார் நடிகர் சூரி என்று கூறினால் அது மிகையல்ல. அவருடைய நடிப்பில் உருவாகும் அனைத்து படங்களும் மிகப்பெரிய வெற்றி திரைப்படங்களாக மாறி வருகிறது.

கோவை ஈஷா அறக்கட்டளை.. ஜோராக நடைபெறும் விக்கியின் LIC பட ஷூட்டிங் - வெளியான சில ருசிகர தகவல்கள் இதோ!

Rotterdam International Film Festival

இந்நிலையில் ஏற்கனவே சூரி நடிப்பில் வெளியான "விடுதலை" படத்தின் முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகத்தின் சிறப்பு காட்சிகள் Rotterdam சர்வதேச திரைப்பட விழாவில் ஜனவரி 31 முதல் பிப்ரவரி 3ஆம் தேதிக்கு இடையில் திரையிடப்பட உள்ளது. விடுதலை படத்தை பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Suresh Kamatchi

அதேபோல பிரபல நடிகர் நிவின் பாலி மற்றும் நடிகை அஞ்சலி நடிப்பில் பிரபல இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவான "ஏழு கடல் ஏழு மலை" திரைப்படத்திலும் சூரி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் இந்த திரைப்படமும் இன்று Rotterdam நகரில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க நடிகர் சூரி உள்ளிட்ட பலரும் அங்கு சென்றுள்ளனர்.  

படிப்பு முதல்... நடிப்பு வரை பட்ட கஷ்டம் கொஞ்சம் இல்ல! 'சிறகடிக்க ஆசை' சீரியல் நாயகி கோமதி பிரியாவின் சோகம்!

click me!