ஆத்தி.. சில நிமிட கேமியோ ரோலுக்கு இத்தனை கோடி சம்பளமா? மாஸ் காட்டும் கமல்ஹாசன்..

First Published Apr 25, 2024, 8:07 PM IST

கல்கி 2898 ஏடி படத்தில் கேமியோ ரோலில் நடிக்க பிரபல உச்ச நடிகர் ஒருவர் ரூ. 20 கோடி சம்பளமாக பெற்றுள்ளார்.

நாக் அஸ்வின் இயக்கி வரும் கல்கி 2898 ஏடி படத்தில் பிரபாஸ் லீட் ரோலில் நடித்து வருகிறார். சூப்பர் ஹீரோ பேண்டஸி படமாக உருவாகி வரும் இப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசைமைத்துள்ளார். இந்த ஆண்டின் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக உள்ளது. சுமார் 600 கோடி என்ற பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி உள்ள இந்த படம் மே 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

ஆனால் இந்த பட்ஜெட்டின் பெரும் பகுதி படத்தின் நடித்துள்ள உச்ச நடிகர்களுக்கு சம்பளத்திற்கே சென்றுள்ளது. அந்த வகையில் கல்கி 2898 ஏடி படத்தில் கேமியோ ரோலில் நடிக்க பிரபல நடிகர் ஒருவர் ரூ. 20 கோடி சம்பளமாக பெற்றுள்ளார்.

அது வேறு யாரும் இல்லை உலகநாயகன் கமல்ஹாசன் தான். இப்படத்தில் நடிப்பதற்காக கமல்ஹாசன் 20 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டின் தொடக்கத்தில் மூன்று வாரங்களுக்குள் தனது பகுதிகளை நடித்து கொடுத்ததாக கூறப்படுகிறது. படத்தில் 15 நிமிடங்களுக்கு குறைவாகவே கமல்ஹாசன் தோன்றுவார் என்றும் தெரிகிறது.

இந்த படத்தில் கமல்ஹாசன் நெகட்டிவ் கேரக்டரில் நடித்துள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் கமலின் கேரக்டர் தொடர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

Kalki 298 AD

ஆனாலும், தீபிகா படுகோன் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் இந்த படத்தில் பெற்ற சம்பளத்தை விட  கமலுக்கு வழங்கப்பட்ட சம்பளம் மிக அதிகம். கமல்ஹாசனின் நட்சத்திர அந்தஸ்தும், அவரின் படங்களுக்கு தமிழகம், வெளிநாட்டில் ரசிகர்கள் என்பதாலும் அவருக்கு அதிக சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

அதிக சம்பளம் கிடைத்தாலும், கல்கி 2898 ஏடி படத்தில் அதிக சம்பளம் வாங்கிய நடிகர் கமல்ஹாசன் இல்லை. லீட் ரோலில் நடித்த பிரபாஸுக்கு தான் அதிக சம்பளம். அவர் ரூ. 150 கோடி சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது.

click me!