அஜித்தின் விடாமுயற்சி.. அதில் நடிக்க தன்னை மகிழ் திருமேனி அழைக்காதது ஏன்? - உண்மையை சொன்ன "மிஷன் நாயகன்"!

First Published Jan 7, 2024, 4:59 PM IST

Actor Arun Vijay : நடிகர் அருண் விஜய் நடிப்பில் பொங்கல் ரேஸில் களமிறங்கும் திரைப்படமாக உருவாகியுள்ளது இயக்குனர் ஏ.எல். விஜயன் மிஷன் சாப்டர் 1 (அச்சம் என்பது இல்லையே).

Arun Vijay childhood

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மிக நெருங்கிய நண்பரான நடிகர் விஜயகுமாரின் மகன் தான் அருண் விஜய். கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியான "முறை மாப்பிள்ளை" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் நாயகனாக இவர் களமிறங்கினார். கங்கா கௌரி, துள்ளித் திரிந்த காலம், பாண்டவர் பூமி மற்றும் இயற்கை என்று இவர் நடிப்பில் நல்ல பல படங்கள் வெளியான பொழுதும், திரை உலகில் இவருக்கு என்று ஒரு பிரேக் கொடுக்கும் திரைப்படம் அமையாமலே இருந்து வந்தது.

Vignesh Shivan: விக்னேஷ் சிவனுக்கு செக்! 7 நாள் கேடு.. மத்திய அரசின் பொதுத்துறை அனுப்பிய பரபரப்பு நோட்டீஸ்!

Pandavar Bhoomi

இந்த சூழலில் கடந்த 2015 ஆம் ஆண்டு தல அஜித் நடிப்பில் வெளியான "என்னை அறிந்தால்" திரைப்படத்தில் விக்டர் மனோகரன் என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்து, நடிப்புலகில் தனது இரண்டாம் இன்னிக்ஸை தொடங்கினார் நடிகர் அருண் விஜய். அதன் பிறகு அவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. அதிலும் குறிப்பாக கடந்த 2019 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் இரட்டை வேடங்களில் அருண் விஜய் நடித்து வெளியான தடம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 

yennai arinthal

இந்நிலையில் தற்பொழுது ஏ.எல். விஜய் இயக்கத்தில் உருவாகி உள்ள மிஷின் படத்தில் நடித்துள்ள அருண் விஜய் அந்த பட ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளார். அப்பொழுது மகிழ் திருமேனி, "விடாமுயற்சி" திரைப்படத்தை இயக்கி வரும் இந்த நேரத்தில், அந்த படத்தில் நடிக்க உங்களுக்கு அழைப்பு விடுத்தாரா என்று கேள்வி கேட்கப்பட்டது. 

அதற்கு பதில் அளித்த அருண் விஜய், மகிழ் திருமேனி மிகவும் possessiveஆன ஒரு இயக்குனர், தான் இயக்கும் நடிகருக்கு அந்த திரைப்படம் நிச்சயம் வெற்றி திரைப்படமாக அமைய வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக செயல்படுபவர். அவர் இயக்கி வெளியான தடம் திரைப்படம் எனக்கு மிகப்பெரிய ஹிட் ஆனது. அதேபோல விடாம முயற்சி திரைப்படம் மிகப்பெரிய ஹிட் திரைப்படமாக மாறும். 

Magizh Thirumeni

அதே நேரத்தில் நான் ஏ.எல். விஜய் திரைப்படத்திலும், பாலா அவர்களின் திரைப்படத்திலும் மும்முரமாக நடித்து வந்த நிலையில் என்னால் கால்ஷீட் கொடுக்க முடியாது என்பதை அறிந்து கொண்ட பின்னரே மகிழ் திருமேனி என்னை விடாமுயற்சி திரைப்படத்திற்கு அழைக்காமல் இருந்தார். விடாமுயற்சி திரைப்பட பணிகள் துவங்கியதும் அவருடன் நான் அலைபேசியில் பேசினேன், இருவரும் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டோம் என்று அருண் விஜய் கூறியுள்ளார்.

Suriya: சூர்யாவின் அழுகை.. நடிப்பு என கூறிய பயின்வான்! கேப்டனுக்கு அஞ்சலி செலுத்தியததன் பின்னணி இதுவா?

click me!