அந்த தகவலுக்கும் நமது சங்கத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை! ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம்.!

First Published Oct 24, 2023, 12:49 PM IST

ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அனைவரும் இன்று கட்டாயம் பேருந்துகள் இயங்கும் என்பதை தங்களது பயணிகளுக்கு குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்க வேண்டும் என தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது. 

ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறை முன்னிட்டு அதிக கட்டணம் வசூல் செய்த காரணத்தால் 120 ஆம்னி பேருந்துகளை அரசு பறிமுதல் செய்ததை கண்டித்து இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என தென்மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு திடீர் அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பு பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்று வழக்கம்போல் ஆம்னி பேருந்து சேவை இயக்கப்படும் என தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்;-  ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அனைவருக்கும் தெரிவித்துகொள்வது. இன்று வெளியான தகவலுக்கும் நமது சங்கத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதையும் எங்களிடம் இது குறித்து யாரும் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம். மேலும் நமது தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தை சார்ந்த 80% பேருந்துகளும் இன்று கட்டாயம் வழக்கம்போல் இயங்கும் என்பதை தெரிவித்துகொள்கின்றோம். 

எனவே ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அனைவரும் தங்களது பயணிகளுக்கு இன்று கட்டாயம் பேருந்துகள் இயங்கும் என்பதை குறுஞ்செய்தி மூலம் (SMS) தெரிவிக்கும்படி நமது தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் மூலம் தெரிவித்து கொள்கின்றோம் என தெரிவித்துள்ளனர். 

click me!