
விஜய் டிவி தொடரில் ஒளிபரப்பாகி வரும் ஒவ்வொரு சீரியலும் ஒரு ரகம். அந்த வகையில் நான்கு அக்கா - தங்கைகள் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக வைத்து ஒளிபரப்பாகி வரும் 'மகாநதி' சீரியலை, பாரதி கண்ணம்மா, ராஜா ராணி, போன்ற ஹிட் சீரியல்களை இயக்கிய பிரவீன் பென்டென்ட் தான் இயக்கி வருகிறார்.
கொடைக்கானலில் வாழும் சந்தானம், தன்னுடைய 4 பெண் குழந்தைகளையும் கரையேற்ற... வெளிநாட்டிற்கு போய் சம்பாதிக்கிறார். தான் கஷ்டப்பட்டு உழைக்கும் பணத்தை நண்பன் பசுபதி அக்கவுண்டுக்கு அனுப்ப, அவர் பணத்தை சந்தானத்தின் குடும்பத்திடம் கொடுக்காமல் ஏமாற்றுகிறார். ஒரு கட்டத்தில் கொடைக்கானலில் ஒரு இடத்தை வாங்க சந்தானம் பணம் கேட்கும் போது தான்... என்னிடம் உன்னுடைய பணமே இல்லை என கை விரிக்கிறார் பசுபதி. நண்பனால் ஏமாற்றப்பட்டதை அறியும் சந்தானம் இந்த விஷயத்தை வெளியே சொல்ல முடியாமல் உயிரையே விடுகிறார்.
நாக சைதன்யா - சோபிதா விருப்பம் போல் நடக்கும் திருமணத்தில் என்ன ஸ்பெஷல்? நாகர்ஜுனா பகிர்ந்த தகவல்!
இதனால் சந்தானம் தன்னுடைய மகளுக்கு ஏற்பாடு செய்த திருமணம் நின்று போக, தந்தை ஏமாற்றப்பட்ட தகவல் காவேரிக்கு தெரிய வருகிறது. தன்னுடைய தந்தை உயிர் போக காரணமாக இருந்த பசுபதியை எதிர்த்து நிற்கிறார். எப்படியே அவரிடம் இருந்து... காவேரி தன்னுடைய தந்தையின் பணத்தை ஓரளவு மீட்டு தங்கையின் இதய ஆபரேஷனுக்காக சென்னை புறப்பட்டு வருகிறார். ஆனால் அந்த பணம் குமரனின் கவன குறைவால் பறிபோகிறது.
இதை தொடர்ந்து காவேரி தங்கை வாழ்க்கைக்காக தன்னுடைய வாழ்க்கையையே பணயம் வைக்க துணிகிறார். சூழ்நிலையால் காவேரி விஜயை திருமணம் செய்ய நேர்கிறது. ஆனால் தொடர்ந்து பசுபதியால் காவேரியின் குடும்பம் சந்திக்கும் பிரச்சனை என்ன? என்பது உணர்வு பூர்வமாக கூறுகிறது இந்த தொடர். டிஆர்பியில் நல்ல ரேட்டிங்கை பிடித்து வரும் இந்த தொடரில் நடித்து வரும் நடிகர்கள், ஒரு எபிசோடுக்கு வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, விஜய் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுவாமிநாதன் ஒரு நாளைக்கு ரூ.15,000 சம்பளமாக பெறுகிறார். அதை போல் காவேரி கதாபாத்திரத்தில் நடித்து வருபவரும் நடிகை லட்சுமி ப்ரியா, ரூ.10,000 பெறுகிறார். குமரன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் கமுருதீன் ஒரு நாளைக்கு ரூ.8000 வாங்குகிறார்.
கங்கா கதாபாத்திரத்தில் தற்போது நடித்து வரும் நடிகை தாரணி ஹெப்சிபா ரூ.6 ஆயிரம் சம்பளமாக பெறுகிறார். யமுனாவாக நடித்து வரும் நடிகை ஆதிரை 5 ஆயிரம் பெறுகிறார். குழந்தை நட்சத்திரமாக நர்மதா கதாபாத்திரத்தில் நடிக்கும் காவியாவுக்கு ரூ. 2000 சம்பளமாக கொடுக்கப்படுகிறது.
இரண்டாவது நாயகனாக நிவின் கதாபாத்திரத்தில் நடிக்கும், ருத்ரன் பிரவீன் ரூ.10,000 சம்பளமாக வாங்குகிறார். வில்லியாக ராகினி வேடத்தில் நடித்து வரும் நடிகை சகஸ்திகா ரூ. 7000 சம்பளமாக வாங்குகிறார். வில்லன் கதாபாத்திரத்தில் பசுபதியாக நடிக்கும் நடிகர் ரமேஷ் ரூ.6000 சம்பளமாக பெறுகிறார். தாத்தா கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் சோமு ரூ. 8000 பெறுகிறார். பாட்டியாக கல்யாணி வேடத்தில் நடிக்கும் நடிகைக்கு ரூ.4000 வழங்கப்படுகிறது.
அதே போல் அஜய் கதாபாத்திரத்தில் நடித்து வரும் பாஸ்கர் நடராஜன் ரூ.5000 பெறுகிறார். நடிகை சுஜாதா சிவகுமார் ரூ.7000 சம்பளமாக பெரும் நிலையில், இந்த சீரியலில் அதிக பட்சமாக நடிகர் சரவணன் சில எபிசோடுகளில் மட்டுமே நடித்தாலும் அவர் ஒரு நாளைக்கு ரூ. 20,000 சம்பளமாக பெற்றதாக கூறப்படுகிறது.
என் தந்தை ஒரு சாதனையாளர்; அவரை பற்றிய அவதூறு வருத்தமளிக்கிறது! ஏ.ஆர்.ரகுமான் மகன் அமீன் குமுறல்!