இந்தத் திரைப்படம் Netflix தலத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெகு ஜோராக ஓடி வரும் நிலையில், அதிரடி மாற்றமாக Netflixல் இந்த திரைப்படத்தை வெளியிடுவதை ஒத்தி வைத்தது அனைவரும் அறிந்ததே. பிரபல நடிகர் கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவான ரங்கூன் திரைப்படத்தை இயக்கிய தமிழ் மக்கள் மத்தியில் புகழ்பெற்ற இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தான் இந்த திரைப்படம் வெளியானது. மேலும் இந்த திரைப்படத்தை பிரபல நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தான் தயாரித்து வழங்கியது.