Nagarjuna
நடிகர் நாகார்ஜுனா, விரைவில் நடைபெற உள்ள தனது மகன் நாக சைதன்யா - சோபிதா துலிபாலாவின் திருமணத்திற்காக கார்த்துக்கொண்டிருக்கிறார். மேலும் இந்த திருமணம் குறித்து இவர் சமீபத்தில் கொடுத்த பேட்டியில், திருமணத்திற்கான திட்டம் குறித்து பகிர்ந்து கொண்டார்.
நாக சைதன்யா மற்றும் சோபிதா இருவரும் ஆடம்பரமான இந்திய திருமணத்தை விரும்பவில்லை என்றும், இப்போது அனைத்தும் அவர்களின் விருப்பப்படியே திட்டமிடப்பட்டு வருவதாக நாகர்ஜுனா தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் கூறியுள்ளார்.
Chai and Sobhita wedding Plan
"சைதன்யாவும் பிரமாண்ட திருமணத்தை விரும்பவில்லை. அவரும் சோபிதாவும் நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டுமே திருமணத்தில் கலந்து கொள்வதை விரும்புகின்றனர். எனவே இதற்கான ஏற்பாடுகளை அவர்களிடமே விட்டுவிடுமாறு என்னிடம் கேட்டுக்கொண்டனர். அவர்கள் அதை தங்கள் வழியில் செய்ய விரும்பினர். உண்மையாகவே இந்த வார்த்தை எனக்கு நிம்மதியை கொடுத்தது. தயவுசெய்து செய்யுங்கள் என்று கூறிவிட்டேன்.
என் தந்தை ஒரு சாதனையாளர்; அவரை பற்றிய அவதூறு வருத்தமளிக்கிறது! ஏ.ஆர்.ரகுமான் மகன் அமீன் குமுறல்!
Tamil cinema latest news
சோபிதாவின் குடும்பத்தினர் திருமணத்திற்கு கொடுக்கும் ஒத்துழைப்பு பற்றி கூறிய நாகர்ஜுனா, "என் மகன் திருமணத்தில், பாரம்பரிய திருமண சடங்குகள் மற்றும் புனித மந்திரங்களின் இடம்பெற வேண்டும் என்பதை நான் விரும்பினேன். "சோபிதாவின் பெற்றோரும், இது போன்ற முறைகளை சேர்க்க விரும்புவதில் தெளிவாக இருந்தனர். என்னை பொறுத்தவரையில், மந்திரங்களும் சடங்குகளும் மிகவும் இனிமையானவை - அவை அமைதியைத் தருகின்றன. இது ஒரு அழகான திருமணமாக இருக்கும், எளிமையானதாகவும், மனதிற்கு இதமானதாகவும் இருக்கும், இந்த ஜோடியைப் போலவே." என கூறியுள்ளார்.
Naga Chaitanya Wedding invitation
இந்த ஜோடி டிசம்பர் 4 ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்கும் நிலையில், குடும்பத்தினருக்கு நெருங்கிய பிரபலங்கள் மட்டுமே அழைக்க பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அண்மையில் பரிசுகளுடன் கூடிய இவர்களின் திருமண பத்திரிக்கை சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
சிவகார்த்திகேயன் - கீர்த்தி சுரேஷ் இடையே போன காதல் டிராக்; கட்டாக இதான் காரணம் - பிரபலம் கூறிய தகவல்!
Sobhita Dulipala wedding Costume
மேலும் சோபிதா தனது திருமண நாளில் தன்னை அலங்கரிக்க உள்ள சேலையை தயாரிக்கும் பணியை
எந்த ஒரு முக்கிய ஸ்டைலிஸ்ட்டுக்கும் கொடுக்காமல், காஞ்சிபுரம் பட்டு சேலை மற்றும் மற்றொரு கதர் சேலை ஆகியவற்றை அணிய உள்ளதாக கூறப்படுகிறது.