
ஏ.ஆர்.ரகுமான் விவாகரத்து செய்தி, வெளியான பின்னர் அவர் பற்றி பரப்பப்படும் ஆதாரமற்ற அவதூறுகளும் அதிகரித்துவிட்டன. இப்படி பரப்பப்படும் தகவல்கள் வருத்தம் அளிப்பதாக, ஏ.ஆர்.ரகுமான் மகன் அமீன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
சற்றும் எதிர்பாராத நேரத்தில், சில பிரபலங்கள் வெளியிடும் ஒட்டு மொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி விடுகிறது. அப்படிப்பட்ட ஒரு செய்தி தான் ஏ.ஆர்.ரகுமான் மனைவி சாய்ரா பானு தன்னுடைய வழக்கறிஞர் மூலம் ஏ.ஆர்.ரகுமானை விட்டு பிரிவதாக அறிவித்த தகவல்.
இந்த செய்தி வெளியான போது, வதந்தியாக இருக்கக்கூடும் என பலர் நினைத்த நிலையில்... பின்னர் சாய்ராவின் வழக்கறிஞர் வந்தனாவே இந்த தகவலை உறுதி செய்தார். பின்னர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும் விவாகரத்து தகவலை உறுதி செய்யும் விதமாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.
சில வருடங்கள் மட்டுமே வாழ்ந்து விட்டு, பிரபலங்கள் சிலர் விவாகரத்து பெற்று பிரியும் நிலையில்... கிட்டத்தட்ட 30 ஆண்டுகால திருமண வாழ்க்கையை நெருங்கி வரும் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் சாய்ரா பானு இருவரும் திருமண வயதில் பிள்ளைகள் இருக்கும் போது, ஒரு மருமகனையே எடுத்த பின்னர், ஏன் விவாகரத்து முடிவை எடுக்க வேண்டும்? என்கிற கேள்வி தான் தற்போது ரசிகர்கள் மண்டையை உருட்டி கொண்டிருக்கிறது.
இதற்கு விளக்கம் கொடுக்கிறோம் என்கிற பெயரிலும், ஏ.ஆர்.ரகுமான் விவாகரத்துக்கு இது தான் காரணம் என்றும், சுய லாபத்திற்காக பல youtube சேனல்கள் வாயிக்கு வந்த கதையை எல்லாம் பேசி பல ஆதாரமற்ற தகவல்களையும், வதந்திகளையும் பரப்பி வருகிறார்கள். அப்படி பரப்பப்படும் தகவல்கள் ஒரு சாதனையாளராக பார்க்கப்படும் ஏ.ஆர்.ரகுமானை தாக்கும் விதத்தில் உள்ளன.
அதே போல் ஏ ஆர் ரகுமானிடம் கிட்டாரிஸ்ட்டாக பணியாற்றி வந்த, மோகினி டேவும்... ஏ ஆர் ரகுமான் விவாகரத்தை அறிவித்த சில மணி நேரங்களில் தன்னுடைய விவாகரத்தை அறிவித்ததால், இருவரையும் இணைத்து பல செய்திகள் வெளியாகி வருகிறது.
மேலும் வேலை நிமித்தமாக ஏ ஆர் ரகுமான் தன்னுடைய குடும்பத்தின் மீது அக்கறை காட்டாததும்... தன்னுடைய சவுண்ட் இன்ஜினியரையே மகளுக்கு திருமணம் செய்து வைத்ததில் சாய்ராவுக்கு உடன்பாடு இல்லை, அப்போதே இருவருக்கும் இடையே பிரச்சனை உருவாகி விட்டது இதுவும் இவர்கள் பிரிவுக்கு ஒரு காரணமாக இருக்க கூடும் என சிலர் கூறி வந்தனர்.
எந்தவித ஆதாரமும் இன்றி, இப்படி பல தகவல்கள் உலாவிக் கொண்டிருக்கும் நிலையில்... ஏ ஆர் ரகுமானின் மகன் அமீன் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில், தன்னுடைய குமுறலை கொட்டி தீர்த்துள்ளார்.
இது குறித்து அமீன் போட்டுள்ள பதிவில், " என் தந்தை ஒரு சாதனையாளர், இசை துறைக்கு அவர் அளித்த பங்களிப்புகளுக்காக மட்டுமல்ல, பல ஆண்டுகளாக அவர் ஈன்ற மதிப்புகள், மரியாதை மற்றும் அன்பு ஆகியவற்றிற்காகவும் அவர் ஒரு சாதனையாளராகவே பார்க்க படுகிறார். அவர் குறித்து தவறான மற்றும் ஆதாரமற்ற வதந்திகள் பரப்பப்படுவதைப் பார்ப்பது வருத்தமளிக்கிறது. தயவு செய்து இதுபோன்ற தவறான தகவல்களை பரப்புவதை தவிர்க்கவும். அவருடைய கண்ணியத்தையும், அவர் நம் அனைவரிடமும் ஏற்படுத்திய நம்பமுடியாத தாக்கத்தையும் போற்றிப் பாதுகாப்போம் என தெரிவித்துள்ளார்.