தமிழ் சினிமாவின் முதல் 1000 கோடி வசூல் படமாக மாற உள்ள மகாராஜா - எப்படி தெரியுமா?

Published : Nov 22, 2024, 02:53 PM IST

நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டான மகாராஜா திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 1000 கோடி வசூலை எட்ட வாய்ப்புள்ளது.

PREV
14
தமிழ் சினிமாவின் முதல் 1000 கோடி வசூல் படமாக மாற உள்ள மகாராஜா - எப்படி தெரியுமா?
Maharaja Movie

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூன் மாதம் திரைக்கு வந்த படம் மகாராஜா. இப்படத்தை நிதிலன் சுவாமிநாதன் இயக்கி இருந்தார். இவர் இதற்கு முன்னர் குரங்கு பொம்மை என்கிற வெற்றிப்படத்தை இயக்கியவர். மகாராஜா திரைப்படம் நடிகர் விஜய் சேதுபதியின் 50வது திரைப்படம் ஆகும். இப்படத்தில் அனுராக் கஷ்யப், அபிராமி, நட்டி நட்ராஜ், சிங்கம் புலி, பிக்பாஸ் சாச்சனா, திவ்ய பாரதி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.

24
Vijay Sethupathi

மகாராஜா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றதோடு, பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.100 கோடி என்கிற இமாலய வசூல் சாதனையையும் படைத்திருந்தது. இப்படத்திற்கு தியேட்டரில் எந்த அளவு வரவேற்பு கிடைத்ததோ, அதேபோன்ற வரவேற்பு ஓடிடியில் ரிலீஸ் ஆன பின்பும் கிடைத்தது. குறிப்பாக இப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆன பின்னர் வெளிநாட்டில் இருந்து ஏராளமானோர் படத்தை பார்த்து சிலாகித்து பாராட்டி இருந்தனர்.

இதையும் படியுங்கள்... ரிலீசுக்கு முன்பே கங்குவாவை விட அதிக வசூலை வாரிக்குவித்த அஜித்தின் விடாமுயற்சி, குட் பேட் அக்லி!

34
vijaysethupathi, Nithilan

இந்நிலையில், மகாராஜா திரைப்படம் வருகிற நவம்பர் 29-ந் தேதி சீனாவில் ரிலீஸ் ஆக உள்ளது. அதுவும் இப்படம் அங்கு 40 ஆயிரத்திற்கும் அதிகமான திரைகளில் ரிலீஸ் ஆக உள்ளதாக கூறப்படுகிறது. சீனாவில் இந்த அளவு அதிகமான திரைகளில் ரிலீஸ் ஆகும் முதல் தமிழ் படம் மகாராஜா தான். இப்படம் சீன மக்களையும் கவரும் என்று எதிர்பார்க்கப்படுவது மட்டுமின்றி அங்கு மட்டும் ரூ. 1000 கோடி என்கிற இமாலய வசூல் சாதனையை நிகழ்த்தும் எனவும் கணிக்கப்படுகிறது.

44
Maharaja Grand Release in China

ஏனெனில் சீனாவில் கடந்த 2017-ம் ஆண்டு அமீர்கான் நடித்த தங்கல் திரைப்படம் சுமார் 9 ஆயிரம் திரைகளில் ரிலீஸ் ஆனது. சீன மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற தங்கல் திரைப்படம் அங்கு மட்டும் ரூ.1200 முதல் 1300 கோடி வரை வசூலித்து இருந்தது. ஆனால் தற்போது மகாராஜா படம் அதைவிட நான்கு மடங்கு அதிகப்படியான திரைகளில் ரிலீஸ் ஆக உள்ளதால், இப்படமும் 1000 முதல் 2000 கோடி வரை வசூலிக்க வாய்ப்பு உள்ளது. அது நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்... 250 கோடியில் உருவான ஷாருக்கான் பட வசூலை 5 கோடியில் படமெடுத்து அசால்டா அடிச்சுதூக்கிய அமீர்கான்!

Read more Photos on
click me!

Recommended Stories