நடிகை கீர்த்தி சுரேஷின் திருமண செய்தி வெளியாகிக்கொண்டிருக்கும் நேரத்தில், பிரபல பத்திரிகையாளர் சபிதா ஜோசப் கீர்த்தி - எஸ் கே இடையே ஓடிய காதல் ட்ராக் குறித்து பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
மலையாள திரை உலகில், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் ஹீரோயின் அவதாரம் எடுத்த கீர்த்தி சுரேஷ் தமிழில் நடிகர் விக்ரம் பிரபு ஜோடியாக 2015 ஆம் ஆண்டு அறிமுகமான திரைப்படம் 'இது என்ன மாயம்'. இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான இந்த படம் இவருக்கு வெற்றிப்படமாக அமையாத நிலையில், இதை தொடர்ந்து இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்த 'ரஜினி முருகன்' திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததை தொடர்ந்து, எஸ்.கே - கீர்த்தி காம்போவும் அதிகம் கவனிக்கப்பட்டது.
26
Sivakarthikeyan and Keerthy suresh Movies
எனவே மீண்டும் இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில், ரெமோ படத்தில் இந்த ஜோடி இணைந்து நடித்திருந்தனர். அந்த சமயத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் சிவகார்த்திகேயன் இடையே ஒரு காதல் ட்ராக் தனியாக ஓடியது என பிரபல பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப், அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில் கூறி பகீர் கிளப்பியுள்ளார்.
இந்த தகவல் அரசல், புரசலாக சிவகார்த்திகேயனின் குடும்பத்தின் காதுக்கு போக, கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த சர்ச்சையில் சிக்கினால் அது வருங்காலத்தில் வளர்ச்சிக்கே அப்பாக்க ஆகிவிடும் என்பதால், சுதாரித்துக் கொண்ட சிவகார்த்திகேயன் கீர்த்தி சுரேஷ் உடனான தொடர்புக்கு என்று கார்டு போட்டுவிட்டு ,அவருடன் இனி எந்த படத்தில் இணைந்து நடிக்க கூடாது என முடிவு செய்தாராம்.
46
Sivakarthikeyan Take Decision
இதன் காரணமாகவே இவர்கள் இருவரும் 'ரேமோ' படத்திற்கு பின்னர் எந்த படத்திலும் இணைந்த நடிக்கவில்லை என சபிதா ஜோசப் கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சிவகார்த்திகேயன் கீர்த்தி சுரேஷ் விஷயத்தில், சூதானமாக இருந்த போதும், இமான் மனைவி விஷயத்தில் கோட்டை விட்டதாகவே தெரிகிறது.
இசையமைப்பாளர் இமான் தன்னுடைய மனைவியை பிரிவதற்கு முக்கிய காரணம் யார் என்பதை வெளிப்படுத்தவில்லை என்றாலும், சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்து விட்டதாக கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
66
Antony Thattil Keerthy suresh Wedding
எது எப்படியோ நடிகை கீர்த்தி சுரேஷ், தன்னுடைய காதலர் ஆண்டனி தட்டில் அடுத்த மாதம் கோவாவில் செய்து கொள்ள உள்ள நிலையில், தன்னுடைய திருமண தகவலை வெளியிட தயாராகி விட்டாராம். இன்னும் ஓரிரு நாட்களில் அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.