வீட்டில் இருந்தபடியே டைம்பாஸ் பண்ண; இந்த வாரம் ஓடிடியில் ரிலீசாகும் படங்கள் லிஸ்ட் இதோ

Published : Nov 22, 2024, 12:09 PM IST

ஓடிடி தளங்களில் இந்த வாரம் ரிலீஸ் ஆகி உள்ள படங்கள் என்னென்ன, அது எந்தெந்த தளங்களில் பார்க்கலாம் என்கிற விவரத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
15
வீட்டில் இருந்தபடியே டைம்பாஸ் பண்ண; இந்த வாரம் ஓடிடியில் ரிலீசாகும் படங்கள் லிஸ்ட் இதோ
OTT Release Tamil Movies

தமிழ் படங்கள்

ஓடிடியில் இந்த வாரம், நயன்தாராவின் ஆவணப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த ஆவணப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. இதுதவிர மேலும் சில ராக்கெட் டிரைவர், லைன் மேன், விவேசினி ஆகிய தமிழ் படங்களும் இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் ஆகி உள்ளது. இதில் ராக்கெட் டிரைவர் படம் சிம்ப்ளி சவுத் ஓடிடியிலும், லைன் மேன் மற்றும் விவேசினி ஆகிய திரைப்படங்கள் ஆஹா ஓடிடியிலும் ஸ்டிரீம் ஆகி வருகின்றன.

25
OTT Release Malayalam Movies

மலையாள படங்கள்

மலையாளத்தில் சமீபத்திய பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படமான கிஷ்கிந்த காண்டம் இந்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஸ்டிரீம் ஆகி வருகிறது. அதேபோல் தெக்கு வடக்கு என்கிற மலையாள படமும் இந்த வாரம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த இரண்டு படங்களின் தமிழ் வெர்ஷனும் ரிலீஸ் ஆகி இருக்கிறது.

இதையும் படியுங்கள்... கோலிவுட்டின் கான்ட்ரவர்சி குயின்! நடிகை நயன்தாரா சந்தித்த சர்ச்சைகள் - ஒரு பார்வை

35
OTT Release Telugu Movies

தெலுங்கு படங்கள்

தெலுங்கில் லக்கம், ராபடி வெலுகு, ஐ ஹேட் லவ் ஆகிய மூன்று படங்கள் இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் ஆகி உள்ளன. இதில் லக்கம் திரைப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் ஸ்டிரீம் ஆகி வருகிறது. அதேபோல் ராபடி வெலுகு மற்றும் ஐ ஹேட் லவ் ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஈ டிவி வின் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

45
OTT Release Hindi Movies

இந்தி படங்கள்

இந்தியில் ஜூனியர் என்.டி.ஆர் நடித்த தேவரா படத்தின் இந்தி வெர்ஷன் இந்த வாரம் தான் நெட்பிளிக்ஸில் ரிலீஸ் ஆகி உள்ளது. இதுதவிர Yeh Kaali Kaali Ankhein வெப்தொடரின் இரண்டாவது சீசன் நெட்பிளிக்ஸிலும் Thukra Ke Mera Pyaar வெப் தொடர் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் ஸ்டிரீம் ஆகி வருகிறது.

55
OTT Release English Movies

ஆங்கிலப் படங்கள்

ஆங்கிலத்தில் டூன் ப்ராபெசி திரைப்படம் ஜியோ சினிமாவிலும், ஜிடி மேக்ஸ் நெட்பிளிக்ஸிலும், வாட்ச்மேன் சாப்டர் 1 எச்.பி.ஓ மேக்ஸிலும், ஸ்பெல் பவுண்ட் நெட்பிளிக்ஸிலும், இந்த வாரம் ரிலீஸ் ஆகி உள்ளது. இந்த அனைத்து படங்களுமே தமிழ் வெர்ஷனிலும் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... ஷாருக்கான், ரஜினி, விஜய் இல்ல! இந்தியாவின் மிகவும் பிரபலமான நடிகர் இவர் தான்!

click me!

Recommended Stories