
நடிகைகள் என்றாலே அவர்களை சுற்றி பல சர்ச்சைகள் இருக்கும். அந்த வகையில் தமிழ் சினிமாவில் அதிக சர்ச்சைகளில் சிக்கிய நடிகை என்றால் அது நயன்தாரா தான். இவர் சினிமாவில் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து இன்று வரை அவரை சுற்றிவரும் சர்சைகள் குறைந்தபாடில்லை. சமீபத்தில் கூட நடிகர் தனுஷை சரமாரியாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கி இருந்தார். இதற்கு முன் நடிகை நயன்தாரா சந்தித்த சர்ச்சைகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
நயன்தாரா - சிம்பு
நடிகை நயன்தாராவும், நடிகர் சிம்புவும் வல்லவன் படத்தில் ஜோடியாக நடித்தபோது காதலித்து வந்தனர். அப்படத்திற்கு பின் இருவரும் ஜோடியாக பட விழாக்களிலும் கலந்துகொண்டனர். நன்றாக சென்றுகொண்டிருந்த இவர்களின் காதல் வாழ்க்கைக்கு எண்டு கார்டு போட்டது இருவரும் படுக்கையறையில் முத்தம் கொடுத்தபடி இருக்கும் புகைப்படம் தான். அந்த புகைப்படம் லீக் ஆகி மிகப்பெரிய அளவில் பேசுபொருள் ஆனது. அதன்பின் இருவரும் பிரேக் அப் செய்து பிரிந்தனர்.
நயன்தாரா - பிரபுதேவா
சிம்புவை தொடர்ந்து பிரபுதேவா மீது காதல் வயப்பட்டார் நயன்தாரா. அப்போது பிரபுதேவாவுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருந்ததால், அவரை எப்படி நயன்தாரா காதலிக்கலாம் என்று எதிர்ப்புகளும் கிளம்பின. ஒரு கட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பாக பேட்டி அளித்த பிரபுதேவாவின் மனைவி ரம்லத், நயன்தாராவை எங்காவது பார்த்தால் எட்டி உதைப்பேன் என பேசி இருந்தது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது.
நயன்தாரா - தனுஷ்
நடிகை நயன்தாராவும் தனுஷும் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்தனர். இதன்காரணமாக தனுஷ் தயாரித்த எதிர்நீச்சல் திரைப்படத்தில் சம்பளமே வாங்காமல் ஒரு பாடலுக்கு நடனமாடி கொடுத்தார் நயன். இதையடுத்து நயன்தாராவை வைத்து நானும் ரெளடி தான் என்கிற படத்தை தனுஷ் தயாரித்தார். அப்படத்தின் போது தான் இருவருக்கும் மோதல் வெடித்தது. அப்படத்தின் பட்ஜெட் எகிறியதால் ஷூட்டிங்கை முடிக்க முடியாமல் கிடப்பில் போட்டார் தனுஷ். பின்னர் தன் சொந்த காசை செலவழித்து அப்படத்தை முடித்தார் நயன்தாரா.
இதையும் படியுங்கள்... நயனை கரம்பிடித்த பின் கடகடவென உயர்ந்த விக்னேஷ் சிவன் சொத்து மதிப்பு - அதுவும் இத்தனை கோடியா?
நயன்தாரா - அல்லு அர்ஜுன்
நடிகை நயன்தாரா நானும் ரெளடி தான் படத்திற்காக விருது வாங்க மேடையேறிய போது, அங்கு விருது வழங்க வந்த அல்லு அர்ஜுனிடம் இருந்து விருதை வாங்க மறுத்து, அந்த விருதை விக்னேஷ் சிவன் கையால் வாங்குவேன் என கூறிவிட்டார். இப்படி மேடையிலேயே நயன்தாரா தன்னை இன்சல்ட் பண்ணியதால் அவருடன் நடிக்கவே கூடாது என முடிவெடுத்துவிட்டாராம் அல்லு அர்ஜுன்.
நயன்தாரா கல்யாணம்
நடிகை நயன்தாரா கடந்த 2022-ம் ஆண்டு விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் திருமணம் முடிந்த கையோடு திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்தது மட்டுமின்றி, அங்கு கோவில் வளாகத்தில் போட்டோஷூட்டும் நடத்தினர். அப்போது நயன்தாரா காலணி அணிந்திருந்தது சர்ச்சை ஆனது. கோவில் வளாகத்தில் எப்படி காலணி அணிந்து வரலாம் என எதிர்ப்புகள் கிளம்பியதை அடுத்து அவர் சார்பாக விக்னேஷ் சிவன் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
நயன்தாரா குழந்தைகள்
நயன்தாராவுக்கு திருமணம் முடிந்த நான்கு மாதங்களில் இரட்டை குழந்தைகள் பிறந்தன. வாடகைத் தாய் மூலம் அவர் அக்குழந்தைகளை பெற்றுக்கொண்டார். திருமணத்துக்கு முன்னரே வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள முயல்வது குற்றம் என்பதால் சட்ட விதிகளை மீறி நயன்தாரா குழந்தைகளை பெற்றுக் கொண்டதாக சர்ச்சை எழுந்த நிலையில், தான் கடந்த 2019-ம் ஆண்டே விக்னேஷ் சிவனை பதிவு திருமணம் செய்துகொண்டதாக கூறி அதிர்ச்சி அளித்தார் நயன்தாரா.
நயன்தாரா பிளாஸ்டிக் சர்ஜரி
நடிகை நயன்தாரா 40 வயதிலும் இளமை குறையாமல் இருக்கிறார். அவர் தன் அழகை மெருகேற்ற பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டதாக சர்ச்சை எழுந்தது. அதனால் தான் அவர் முகம் மாறி இருப்பதாகவும் பேச்சு அடிபட்டது. இதற்கு ஓப்பனாகவே பதிலளித்த நயன்தாரா, தன்னுடைய முகம் மாறியதற்கு காரணம் டயட் தான். நான் எந்தவித சர்ஜரியும் செய்யவில்லை என தெளிவுபடுத்தினார்.
இதையும் படியுங்கள்... நயன்தாரா சொன்னது பொய்; தனுஷுக்கு ஆதரவாக பேசிய குடும்ப உறுப்பினர்!