3 மனைவிகளுடன் கோடீஸ்வரனாக வாழ்ந்து கடைசில பிச்சைக்காரனாகும் நடிகர்: ராஜாகிளி டிரைலர்!

First Published | Nov 22, 2024, 10:05 AM IST

Thambi Ramaiah Rajakili Trailer : காசு, பணம் வசதி வாய்ப்பு இருப்பதால் ஒன்றுக்கும் அதிகமான திருமணங்கள் செய்து கடைசில பிச்சைக்காரனான நடிகர் பற்றி தான் இந்தப் பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

Rajakili Trailer, Thambi Ramaiah, Samuthirakani, Thambi Ramaiah Son Umapathy

Thambi Ramaiah Rajakili Trailer : தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், பின்னணி பாடகர், இசையமைப்பாளர் என்று பன்முக திறமைகளை கொண்டார் நடிகர் தம்பி ராமையா. 1999ஆம் ஆண்டு முதல் இப்போது வரையில் ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். இவரோட நடிப்ப பத்தி சொல்லவா வேணும். மைனா, தனி ஒருவன், கொம்பன் போன்ற படங்கள் அவரோட நடிப்பு திறமைக்கு ஒரு சான்று. இதில் குணச்சித்திர கதாபாத்திரம், வில்லன் என்று எத்தனையோ படங்களில் நடித்துள்ளார். ஒரு சில படங்களில் அவர் தான் முன்னணி நடிகர். அதாவது குடும்ப கதையில் லீடு ரோல். அவரைப் பற்றியும், அவரது குடும்பத்தில் நடக்கும் கதையை மையப்படுத்திய படத்தில் நடிகர் சமுத்திரக்கனியுடன் இணைந்து நடித்துள்ளார்.

Umapathy Ramaiah, Rajakili Movie Release Date

இப்போதும் அப்படிப்பட்ட ஒரு ரோலில் தான் நடித்திருக்கிறார். இந்தக் கதையில் அவர் தான் நாயகன். சமுத்திரக்கனி 2ஆவது. ஏற்கனவே சமுத்திரக்கனி மற்றும் தம்பி ராமையா இருவரும் சாட்டை, அப்பா மற்றும் விநோத சித்தம் ஆகிய படங்களில் நடித்திருந்தனர். இவர்களுடன் டேனியல் பாலாஜி, தீபா, எம்.எஸ்.பாஸ்கர், பழ கருப்பையா, இளவரசு, ஆடுகளம் நரைன், கிரிஷ் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். அந்த படம் தான் ராஜாகிளி. இது கொம்பன் படத்தில் நடித்த தம்பி ராமையாவின் கதாபாத்திரத்தின் பெயர். இந்தப் படத்தோட இயக்குநர் வேறு யாருமில்ல. தம்பி ராமையாவின் மகன் உமாபதி தான். சமீபத்தில் இவருக்கும் ஆக்‌ஷன் கிங் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யவுக்கும் திருமணம் நடைபெற்றது.

Tap to resize

Thambi Ramaiah Son Umapathy, Rajakili Trailer

திருமணத்திற்கு பிறகு உமாபதி தன்னோட முதல் படத்தை எடுத்து முடித்திருக்கிறார். இந்தப் படத்திற்கு தம்பி ராமையா தான் இசையமைத்திருக்கிறார். அதோடு, வசனம், பாடல் வரிகள் எல்லாமே இவர் தான். இந்த நிலையில் தான் ராஜாகிளி படத்தின் டிரைலர் வெளியானது. இதில் தம்பி ராமையா முருகப்பா சென்றாயர் என்ற பெயரில் தனியார் பேருந்து, ரியல் எஸ்டேட், ஜவளிக்கடை என்று பல தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார்.

தம்பி ராமையா மற்றும் சமுத்திரக்கனியின் ராஜாகிளி டிரைலர்!

Thambi Ramaiah, Samuthirakani

இதில் ஒரு தேதி குறித்து கொடுத்தால் 3ஆவது திருமணமும் செய்து கொள்வேன் என்று வசனம் பேசுகிறார். காசு, பணம், வசதி வாய்ப்பு இருப்பதால் அடுத்தவர் மனைவி மீது ஆசப்பட்டு அவரோட கணவரை கொலை செய்து ஜெயிலுக்கும் செல்லும் நிலையும் வருகிறது. கடைசியில் சொத்து சுகம் எல்லாவற்றையும் இழந்து பிச்சைக்காரனாகிறார். ஆரம்பத்தில் கோடீஸ்வரனாக ஆரம்பித்து பிச்சைக்காரனாக டிரைலர் முடிகிறது.

Rajakili Trailer

இதற்கிடையில் நடக்கும் சம்பவங்கள் தான் படத்தோட கதை. இதில் சில உண்மை சம்பவங்களும் இருப்பதாக தெரிகிறது. நீங்களே யோசித்து பார்த்தால் உங்களுக்கே புரியும். அதைப் பற்றி இதில் குறிப்பிடவில்லை. ராஜாகிளி படம் கண்டிப்பாக இளைஞர்கள் கொண்டாடும் ஒரு படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் தம்பி ராமையா இதுவரையில் அப்படி ஒரு கதைகளில் தான் நடித்து வந்துள்ளார். முதலில் நவம்பர் 29 ஆம் தேதி வெளியாகும் என்று போஸ்டரில் வெளியான நிலையில் டிசம்பர் 13 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Latest Videos

click me!