நயன்தாராவின் ‘லக்கி சார்ம்’ விக்கியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

First Published | Nov 22, 2024, 8:45 AM IST

நடிகை நயன்தாராவின் கணவரும், தமிழ் சினிமா இயக்குனருமான விக்னேஷ் சிவனின் சொத்து மதிப்பு மற்றும் சம்பள விவரம் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Vignesh Shivan, Nayanthara

சிம்பு நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு திரைக்கு வந்த போடா போடி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அப்படத்தை தொடர்ந்து அவர் இயக்கிய நானும் ரெளடி தான் படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. நானும் ரெளடி தான் படத்திற்கு பின்னர் சூர்யாவை வைத்து தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கிய விக்கி, கடைசியாக கடந்த 2022-ம் ஆண்டு காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தை இயக்கி இருந்தார். அப்படமும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

Nayanthara Husband Vignesh Shivan

விக்னேஷ் சிவன் இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் தனுஷின் வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இதுதவிர பாடலாசிரியராகவும் பல வெற்றிப் பாடல்களை கொடுத்துள்ளார். பெரும்பாலும் தான் இயக்கும் படங்களுக்கு அதிக பாடல்களை எழுதியுள்ள விக்கி, அஜித்தின் என்னை அறிந்தால், விஜய்யின் மாஸ்டர், ரஜினியின் ஜெயிலர், சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் போன்ற டாப் ஹீரோக்களின் படங்களுக்கும் பாடல்கள் எழுதி உள்ளார்.

Tap to resize

Vignesh Shivan Nayanthara Candid Click

விக்னேஷ் சிவனை ஒரு இயக்குனராக தெரிந்ததைவிட அவர் நடிகை நயன்தாராவின் கணவராக தான் பலருக்கும் தெரிந்திருக்கும். அவரும் நடிகை நயன்தாராவும் நானும் ரெளடி தான் படத்தில் பணியாற்றியபோதே காதல் வயப்பட்டனர். அங்கு தொடங்கிய இவர்களின் லவ் ஸ்டோரி 7 ஆண்டுகளுக்கு பின் திருமண பந்தத்தில் இணைந்தது. கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் இருவரும் குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டனர்.

vignesh shivan Sons

விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடிக்கு திருமணமான நான்கு மாதங்களிலேயே உயிர், உலக் என இரட்டை குழந்தைகள் பிறந்தன. அவர்கள் வாடகைத் தாய் மூலம் அந்தக் குழந்தைகளை பெற்றுக் கொண்டனர். திருமணத்துக்கு பின்னர் விக்கி - நயன்தாரா இருவருமே சினிமாவில் கவனம் செலுத்தி வருகின்றனர். அதிலும் விக்னேஷ் சிவனுக்கு திருமணம் முடிந்த கையோடு நடிகர் அஜித்தின் ஏகே 62 திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இதையும் படியுங்கள்... ஒரு பாட்டுக்கு ரூ.25 லட்சம் சம்பளம்! இந்தியாவின் டாப் பாடகி! இவங்க கணவரும் வெயிட்டு பார்ட்டி தான்!

Ajith, Vignesh Shivan

அப்படத்திற்கான ஆரம்பக் கட்ட வேலைகளில் விக்கி ஈடுபட்டு ஷூட்டிங்கிற்கு தயாராகி வந்த சமயத்தில் திடீரென விக்னேஷ் சிவனை அப்படத்தில் இருந்து நீக்கியது அதன் தயாரிப்பு நிறுவனமான லைகா. விக்னேஷ் சிவன் சொன்ன கதை திருப்தி அளிக்காததால் அவரை படத்தில் இருந்து தூக்கிவிட்டு அவருக்கு பதிலாக இயக்குனர் மகிழ் திருமேனியை கமிட் செய்தனர். அந்தப்படம் தான் தற்போது விடாமுயற்சி என்கிற பெயரில் உருவாகி வருகிறது.

Vignesh Shivan LIK Movie

அஜித் படத்தில் இருந்து நீக்கப்பட்ட விக்னேஷ் சிவன் அடுத்ததாக லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்கிற பெயரில் புதிய படத்தை இயக்கினார். அப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும் அதில் கீர்த்தி ஷெட்டி, கெளரி கிஷான், எஸ்.ஜே.சூர்யா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு இப்படம் திரைக்கு வர உள்ளது.

Vignesh Shivan Net Worth

கோலிவுட்டின் பணக்காரை நடிகை என்றால் அது நயன்தாரா தான் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். அவருக்கு 200 கோடிக்கு மேல் சொத்துக்கள் உள்ளன. ஆனால் நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவனின் சொத்துமதிப்பு பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. நயன்தாராவை திருமணம் செய்துகொண்ட பின்னர் விக்னேஷ் சிவனின் சொத்து மதிப்பு மளமளவென உயர்ந்துள்ளது. அவரது சொத்து மதிப்பு 50 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

Vignesh Shivan Salary

விக்னேஷ் சிவன் ஒரு படத்திற்கு ரூ.3 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார். இதுதவிர பாடல்கள் எழுத ஒரு பாடலுக்கு 3 லட்சம் வரை அவர் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. மேலும் நயன்தாரா உடன் சேர்ந்து பல தொழில்களையும் செய்து வருகிறார் விக்கி. குறிப்பாக நயன்தாராவின் ரெளடி பிக்சர்ஸ், 9ஸ்கின் போன்ற நிறுவனங்களில் பங்குதாரராக உள்ள விக்கி, டிவைன் புட்ஸ் உள்பட 15க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் முதலீட்டாளராகவும் இருக்கிறார். இந்நிறுவனங்கள் மூலம் அவருக்கு நல்ல வருமானம் கிடைத்து வருகிறது. 

இதையும் படியுங்கள்... நயன்தாரா சொன்னது பொய்; தனுஷுக்கு ஆதரவாக பேசிய குடும்ப உறுப்பினர்!

Latest Videos

click me!