ஒரு பாட்டுக்கு ரூ.25 லட்சம் சம்பளம்! இந்தியாவின் டாப் பாடகி! இவங்க கணவரும் வெயிட்டு பார்ட்டி தான்!

First Published | Nov 22, 2024, 8:25 AM IST

பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் தனது இனிமையான குரலுக்காக மட்டுமல்ல, ஒரு பாடலுக்கு வாங்கும் சம்பளத்திற்காகவும் அறியப்படுகிறார். அவரின் கணவர் மிகப்பெரிய நிறுவனத்தின் தலைவராக இருக்கிறார். 

India's Top Singer

பிரபல பின்னணி பாடகர்கள் என்று வரும்போது, ​​முத்திரை பதித்தவர்கள் பலர் இருக்கின்றனர்.. இருப்பினும், ஒரு பாடகி தனது இனிமையான குரலுக்காக மட்டுமல்ல, ஒரு பாடலுக்கு அவர் வாங்கும் சம்பளத்திற்காகவும் அறியப்படுகிறார். அவரின் சம்பளத்தை விட மற்றொரு சுவாரஸ்ய தகவல். அவரின் கணவரும் மிகப்பெரிய பணக்காரர். உலக அளவில் புகழ்பெற்ற நிறுவனத்தில் உயர் பதவியில் இருக்கிறார்.

India's Top Singer

அந்த பாடகி வேறு யாருமல்ல இசை உலகின் ராணியாக கருதப்படும் ஸ்ரேயா கோஷல் தான். அவர் தனது இனிமையான குரல் மூலம் லட்சக்கணக்கான ரசிகர்களை கட்டிப் போட்டிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, பெங்காலி, மராத்தி, அசாமீஸ், பஞ்சாபி, ஒரியா என பல மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடி உள்ளார்.

தமிழில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி தமிழ் ரசிகர்கள் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார். சிறந்த பாடகிக்கான தேசிய விருதுகள் உட்பட பல விருதுகளையும் அவர் பெற்றுள்ளார். இந்திய சினிமாவின் மிகவும் வெற்றிகரமான பாடகிகளில் ஸ்ரேயே கோஷல் முக்கியமானவர்.

Tap to resize

India's Top Singer

அதிக சம்பளம் வாங்கும் பாடகி

பாலிவுட்டில் ஏ.ஆர். ரஹ்மானுக்கு அடுத்தபடியாக அதிக சம்பளம் வாங்கும் பாடகி ஸ்ரேயா கோஷல். ஆம். ஸ்ரேயா ஒரு பாடலுக்கு ரூ.25 லட்சம் சம்பளம் வாங்குகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.. இதன் மூலம் இசை உலகின் ராணியாக தன்னை நிலைநிறுத்துகிறார் ஸ்ரேயா கோஷல். 

India's Top Singer

ஸ்ரேயா கோஷலின் காதல் கதை

தனது சிறு வயது தோழரான ஷிலாதித்யா முகோபாத்யாயா என்பவரை தான் ஸ்ரேயா கோஷல் காதலித்து திருமணம் செய்து கொண்டார். 10 ஆண்டுகள் காதலித்து வந்த இந்த ஜோடி 2015-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ஒரு நண்பரின் திருமணத்தின் போது ஷிலாதித்யா தன்னிடம் புரபோஸ் செய்ததாக ஸ்ரேயா கோஷல் கூறியிருந்தார். அவரை தனது ஆத்ம துணையாக கருதுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

India's Top Singer

ஸ்ரேயா கோஷலின் கணவர்: உலகளாவிய வணிகத் தலைவர்

ஸ்ரேயா இசைத் துறையை ஆளும் அதே வேளையில், அவரது கணவரும் வணிக உலகில் நன்கு அறியப்பட்ட வணிகத் தலைவராக உள்ளார். ஆம். True caller நிறுவனத்தின் உலகளாவிய தலைவராக ஷிலாதித்யா இருக்கிறார். பிரபல கால் பிளாக்கிங் நிறுவனமான True caller நிறுவனம் பல பில்லியன் டாலர் மதிப்பு கொண்டது. மேலும் இரண்டு ஸ்டார்ட்அப் நிறுவனங்களை நிறுவியுள்ளார், முதலாவது Hipcaskm ஆகும், இது ஒரு விரிவான ஒயின் சேகரிப்பை வழங்கும் தளமாகும், மற்றொன்று சிறு வணிகங்களுக்கு நிதியுதவி வழங்கும் Pointshelf ஆகும்.

India's Top Singer

ஸ்ரேயா கோஷல் & ஷிலாதித்யா நிகர மதிப்பு

ஷிலாதித்யாவின் நிகர மதிப்பு சுமார் ரூ.1,406 கோடி, ஸ்ரேயாவின் சொத்து மதிப்பு சுமார் ரூ.180-185 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. நிதி ரீதியாக வெற்றிகரமான ஜோடிகளில் ஒன்றாகவும் இந்த ஜோடி இருக்கின்றனர். இந்த தம்பதிக்கு தேவ்யன் என்ற மகன் பிறந்துள்ளார்.

India's Top Singer

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரேயா கோஷல் அடிக்கடி சமூக ஊடகங்களில் அபிமான குடும்ப தருணங்களைப் பகிர்ந்து கொள்கிறார். அவர்களின் பரபரப்பான தொழில் வாழ்க்கை இருந்தபோதிலும், அவர்கள் குடும்பத்திற்கு முன்னுரிமை அளித்து, அவர்களின் அன்பு மற்றும் வெற்றியால் ரசிகர்களை ஊக்கப்படுத்துகிறார்கள்.

Latest Videos

click me!