நயன்தாரா சொன்னது பொய்; தனுஷுக்கு ஆதரவாக பேசிய குடும்ப உறுப்பினர்!

First Published | Nov 21, 2024, 11:32 PM IST

Nayanthara and Dhanush : கடந்த சில நாள்களாவே பிரபல நடிகை நயன்தாரா மற்றும் நடிகர் தனுஷ் இடையே நடக்கும் விஷயங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.

Nayanthara Controvery

தமிழ் சினிமாவில் தற்பொழுது மிகப் பெரிய விவாத பொருளாக மாறி இருக்கிறது நயன்தாரா மற்றும் தனுஷ் இடையே நடந்து வரும் போராட்டம். பிரபல Netflix தளத்தில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் காதல் கதை ஒரு தொடராக வெளியானது. இந்த நிலையில் அந்த தொடரில் நானும் ரவுடிதான் திரைப்படத்திலிருந்து சில காட்சிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதற்கு சட்டப்படி படத்தின் தயாரிப்பாளரான தனுஷுக்கு இழப்பீடு கொடுக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது இதனால் தனுஷ் சார்பில் சுமார் 10 லட்சம் ரூபாய் இழப்பீடு தர வேண்டும் என்று நயன்தாராவுக்கு நோட்டீஸ் அனுப்பிய நிலையில் நடிகர் தனுஷை தாக்கி ஒரு பதிவினை நயன்தாரா வெளியிட்டிருந்தார்.

தளபதி 69; விஜயுடன் மீண்டும் இணையும் வாரிசு நடிகை? வினோத் போடும் மாஸ் பிளான்!

Naanum Rowdy Thaan

மேலும் அவர் வெளியிட்டிருந்த அந்த பதிவில் தந்தை கஸ்தூரிராஜா மற்றும் திறமையான அண்ணன் செல்வராகவனின் உதவியால் திரைத்துறைக்கு வந்த தனுஷ் என்று அவர் குறிப்பிட்டு இருந்தது நடிகர் தனுஷின் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தானே முயன்று இன்று இவ்வளவு பெரிய நடிகராக வளர்ந்தவரை இப்படி பேசுவது எந்த விதத்தில் நியாயமாகும் என்றும் அதேபோல நயன்தாரா குறிப்பிட்டது போல மூன்று நொடிகள் அல்லாமல் நானும் ரவுடிதான் படத்திலிருந்து சுமார் 37 நொடி அளவிலான காட்சிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தனர் தனுஷ் ரசிகர்கள்.

Tap to resize

Vijay Sethupathi

இந்த சூழலில் பிரபல நடிகை நயன்தாரா, தனுஷை எதிர்த்து வெளியிட்ட பதிவிற்கு அவரோடு இணைந்து நடித்த சுருதிஹாசன், ஐஸ்வர்யா ராஜேஷ், அனுபமா மற்றும் நஸ்ரியா நிசாம் போன்ற முன்னணி நடிகைகள் தனுஷுக்கு எதிராகவும், நயன்தாராவுக்கு ஆதரவாகவும் கருத்துக்களை வெளியிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனுசுக்கு ஆதரவாக அவருடைய குடும்பத்திலிருந்து ஒரு குரல் எழுந்திருக்கிறது.

Kasthuri Raja

தனுஷின் தந்தை கஸ்தூரிராஜா ஒரு ஊடகத்திற்கு அளித்த பெட்டியில் "எனக்கும் எனது குடும்பத்தாருக்கும் பிற விஷயங்களைவிட தொழில் கவனமாக இருப்பது தான் மிகவும் பிடிக்கும். அப்படித் தான் தனுஷ் அவர்களும் இருப்பார். பிறர் பேசுவதை எதுவும் காதில் போட்டுக்கொள்ள மாட்டார். இந்த விஷயத்தில் நடிகை நயன்தாரா சொல்லும் அனைத்து விஷயங்களும் பொய். மேலும் இதுகுறித்து பேச எனக்கு விருப்பமில்லை" என்று அவர் கூறியுள்ளார்.

பிரபலத்தின் கல்யாணம்; அருகருகே இருந்தும் பேசாமல் கடந்து சென்ற நயன்தாரா & தனுஷ்!

Latest Videos

click me!