இந்த அறிவிப்பு அவருடைய ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்திருந்தாலும், நம்முடைய அபிமான நட்சத்திரம் விரைவில் அரசியலில் களமிறங்க போகிறார் என்கின்ற ஆனந்தம் அவர்களுக்குள்ளே எழுந்தது. இந்த சூழலில் தன்னுடைய தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் மாநில மாநாட்டை வெகு சிறப்பாக விக்கிரவாண்டியில் நடத்தி முடித்தார். இன்று வரை அந்த மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் வைரலாகி வருகிறது என்றால் அது சற்றும் மிகையல்ல. குறிப்பாக ஆளும் திராவிட முன்னேற்றக் கழகத்தை அவர் நேரடியாக தாக்கிப் பேசியது பெரும் பரபரப்புகளை ஏற்படுத்தியது.
அதே நேரம் அவருடைய அந்த பேச்சுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையான கண்டனங்களை முன்வைத்தார். அதே போல விடுதலை சிறுத்தைகள் கட்சி தொல் திருமாவளவனும் கடுமையாக விஜயை சாடி பேசினார். ஆனால் இவர்கள் இருவருமே, இதற்கு முன்பு தளபதி விஜயை பெரிய அளவில் அரசியலில் வரவேற்றதும் குறிப்பிடத்தக்கது.