பெண்கள், ஆண்களை விட அனைத்து வகையிலும் பெரியவர்கள், அவர்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதை நிரூபிக்கும் ஒரு கதாபாத்திரத்தில் மன்னன் படத்தில் நடித்திருப்பார் விஜயசாந்தி. இந்நிலையில் இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் மற்றும் விஜயசாந்தி இடையே நடக்கும் ஒரு வாக்குவாதத்தின் இறுதியில், ரஜினிகாந்தை அவரது கன்னத்தில் அறைவது போன்ற ஒரு காட்சி இந்த திரைப்படத்தில் அமைக்கப்பட்டு இருக்கும். பி. வாசு இந்த காட்சியை விஜயசாந்தியிடம் கூறிய போது, ரஜினியை நான் அடிப்பது என்பது ரசிகர்களால் கொஞ்சம் கூட ஏற்றுக் கொள்ளப்படாத விஷயமாகும். நீங்கள் எவ்வளவு என்னை வற்புறுத்தினாலும் இந்த ஒரு காட்சியில் மட்டும் நான் நடிக்கவே மாட்டேன் என்று கூறியிருக்கிறார் விஜயசாந்தி.