ஆரம்பிச்சு ஒரு மாசம் கூட ஆகல; அதற்குள் 'கார்த்திகை தீபம்' சீரியலை விட்டு வெளியேறிய முக்கிய நடிகர்!

First Published | Nov 21, 2024, 4:52 PM IST

'கார்த்திகை தீபம்' சீரியலின் இரண்டாம் பாகம் துவங்கி ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், அந்த சீரியலில் நடித்த முக்கிய நடிகர் தற்போது சீரியலில் வெளியேறியுள்ளார்.

karthigai Deepam

ஜீ தமிழ் தொலைக்காட்சியில், ஒளிபரப்பாகி வந்த 'கார்த்திகை தீபம்' சீரியலின் இரண்டாம் பாகம், கடந்த மாதம் துவங்கிய நிலையில்... இந்த சீரியலில் இருந்து, பிரபல நடிகர் வெளியேறி உள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
 

Karthigai deepam serial

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் எத்தனையோ சீரியல் ஒளிபரப்பாகி வந்தாலும். கார்த்திக் ராஜ் - ஆர்த்திகா நடித்து வந்த, 'கார்த்திகை தீபம்' சீரியலுக்கு தனி மவுசு இருந்து வந்தது. தன்னுடைய நிறத்தாலும், எழ்மையாலும் பாடும் திறமை இருந்தும் புறக்கணிக்கப்படும் ஒரு பெண், தன்னுடைய திறமையை நிரூபிக்கவும், காதலை காப்பாற்றி கொள்ளவும் போராடும் உணர்வு பூர்வமான கதை களத்தில் இந்த சீரியல் எடுக்கப்பட்டு வந்தது.

இனி சேர்ந்து வாழ முடியாது; ஒற்றைக் காலில் நின்ற தனுஷ் - ஐஸ்வர்யா - கோர்ட் சொன்னதென்ன?
 

Tap to resize

Karthigai deepam serial

500 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வந்த இந்த 'கார்த்திகை தீபம்' சீரியலின் முதல் பாகம், கடந்த மாதம் முடிவடைந்தது. தீபாவின் கதாபாத்திரம் உயிரிழந்தது போல் இதில் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. முதல் பாகம் முடிந்த கையேடு, இரண்டாவது பாகம் துவங்கப்பட்டது. இதில் ஆர்த்திகாவின் கதாபாத்திரம் இடம்பெறவில்லை. இது குறித்து அவரிடம் ரசிகர்கள் வருத்தத்தோடு கேள்வி எழுப்பியபோது, தனக்கு திருமணமாகி விட்டதால் நெருக்கமான காட்சிகளில் என்னால் நடிக்க முடியாது. எனவே தன்னை திட்டமிட்டே சீரியல் குழுவினர் தூக்கி விட்டதாக உருக்கமாக கூறி இருந்தார்.
 

Ayup Quit the Serial

மேலும் இரண்டாவது பாகத்தில், கார்த்திக் ராஜ் ஹீரோவாக நடிக்க, நிமோஷ், அயூப், விஜயகுமார்,  வடிவுக்கரசி, ரேஷ்மா பசுபுலேட்டி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். கார்த்திகை தீபம் 2 சீரியல் துவங்கி 1 மாதம் கூட ஆகாத நிலையில், அருண் கதாபாத்திரத்தில் நடித்து வந்த அயூப் சீரியலில் இருந்து விலகி விட்டதாக அறிவித்துள்ளார். என்ன காரணத்திற்காக இவர் சீரியலில் இருந்து விலகுகிறார் என்கிற தகவல் இதுவரை தெரியவில்லை. வேறு சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக இந்த சீரியலில் இருந்து விலகி இருக்கலாம் என கூறப்படுகிறது.

விவாகரத்துக்கு பின்னும் இப்படியா? ஜிவிக்காக ஓகே சொன்ன சைந்தவி - ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!

Latest Videos

click me!