"ஒரு கோடி இழப்பீடு வேணும்" சிக்கலில் சிக்கிய அமரன் - இளைஞர் கொடுத்த பகீர் புகார்!

First Published | Nov 21, 2024, 4:51 PM IST

Amaran Controversy : சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் வெளியாகி சுமார் 21 நாள்கள் கழித்து, அப்படத்தின் மீது பரபரப்பு புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. 

Amaran

பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த அக்டோபர் மாதம் 31ம் தேதி தீபாவளி ரிலீஸ் திரைப்படமாக வெளியானது தான் அமரன். இந்திய ராணுவத்தில் சேர்ந்து வீரமரணமடைந்த தமிழக வீரர் முகுந்த் வரதராஜனின் கதையை தழுவி தான் இந்த படம் எடுக்கப்பட்டது. மறைந்த வீரர் முகுந்த் கதாபாத்திரத்தில் நடிகர் சிவகார்த்திகேயனும், இந்த படத்தில் அவரது மனைவியாக பிரபல நடிகை சாய் பல்லவியும் மிக நேர்த்தியான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். கௌதம் கார்த்தி நடிப்பில் வெளியான ரங்கூன் படத்தைய் இயக்கிய இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், உலக நாயகன் கமல்ஹாசன் கமலின் ராஜ் கமல் நிறுவனத்தின் தயாரிப்பிலும் இந்த படம் உருவானது.

ஏ.ஆர் ரஹ்மான் ஏன் தனது பெயரை மாற்றினார்? இப்படி ஒரு காரணம் இருக்கா?

Sai Pallavi

நடிகை சிவகார்த்திகேயனின் கேரியர் பெஸ்ட் திரைப்படம் இது என்று சொல்லும் அளவிற்கு உலக அளவில் கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனைப்படைத்து வருகின்றது அமரன் திரைப்படம். திரையரங்குகளில் இந்த படம் சிறப்பான முறையில் ஓடி வருவதால், Netflix நிறுவனம் இப்பொது அமரன் படத்தின் OTT ரிலீஸ் தேதியை தள்ளிவைக்கும் அளவிற்கு அமரன் படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றது. மேலும் இந்த தீபாவளிக்கு அமரன் படத்தோடு இணைந்து வெளியான ஜெயம் ரவியின் பிரதர், கவினின் ப்ளடி பெக்கர் மற்றும் துல்கரின் லக்கி பாஸ்கர் உள்ளிட்ட படங்கள் கொஞ்சம் குறைவான வசூலையே பெற்றுள்ளது.

Tap to resize

Amaran movie

கடந்த தீபாவளி திருநாளுக்கு வெளியாகி வெற்றிகரமாக ஓடி வரும் அமரன் படத்தின் மீது சுமார் 21 நாள்கள் கழித்து இப்பொது பரபரப்பு புகார் ஒன்று வந்துள்ளது. அமரன் படத்தில், நாயகி சாய் பல்லவி தோன்றும் ஒரு கட்சியில் ஒரு மொபைல் எண் படத்தில் காட்டப்படுகிறது. பொதுவாக சினிமாவில் இதுபோன்ற காட்சிகளில் சில டம்மி நம்பர்கள் தான்  பயன்படுத்தப்படும். ஆனால் அமரன் படத்தில் கட்டப்பட்ட அந்த மொபைல் எண் உண்மையிலேயே வாகீசன் என்ற இளைஞர் ஒருவருடைய எண் என்று கூறப்படுகிறது. வாகீசன் ஒரு பொறியியல் மாணவர் என்று இப்பொது தகவல் வெளியாகியுள்ளது.

Amaran Controversy

படம் வெளியான நாள் முதல் தினமும் தனது தொடர்ச்சியாக தெரியாத எண்களில் இருந்து அழைப்புகள் வருவதாக அந்த மாணவர் புகார் அளித்துள்ளார். தன்னால் சரியாக தன்னுடைய படிப்பில் கவனம் செலுத்தமுடியவில்லை என்றும், இரவிலும் தொடர்ந்து அழைப்புகள் வருவதால் தன்னால் சரியாக கூட தூங்க முடியவில்லை என்று கூறி அந்த மாணவர் இப்பொது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் தனக்கு 1.1 கோடி நஷ்ட ஈடு தரவேண்டும் என்றும் அவர் அந்த புகார் மனுவில் அறிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

திருமணமே வேண்டாம்; முரட்டு சிங்கிளாக இருக்க முடிவெடுத்த ஐஸ்வர்யா லட்சுமி - காரணம் என்ன?

Latest Videos

click me!