மலையாள நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி, விஷாலின் ஆக்ஷன் படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். அப்படத்தை தொடர்ந்து தனுஷுக்கு ஜோடியாக ஜகமே தந்திரம் படத்தில் நடித்த ஐஸ்வர்யா லட்சுமிக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம் என்றால் அது பொன்னியின் செல்வன் தான். அப்படத்தில் சமுத்திரக் குமாரி பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றார் ஐஸ்வர்யா. அப்படத்துக்கு பின் அவருக்கு தமிழில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.
24
Thug Life Actress Aishwarya Lekshmi
தற்போது இவர் நடிப்பில் தமிழில் தக் லைஃப் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை மணிரத்னம் இயக்கி உள்ளார். இப்படத்தில் கமல்ஹாசன், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் நடித்துள்ளார் ஐஸ்வர்யா லட்சுமி. இப்படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் திரைக்கு வர உள்ளது. இப்படத்திலும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமிக்கு நல்ல ரோல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
34 வயதாகும் ஐஸ்வர்யா லட்சுமி, திருமணம் செய்துகொள்ளப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். நீண்ட யோசனைக்குப் பிறகு தான் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறியுள்ளார். 25 வயது வரை திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டதாகவும், ஆனால் திருமணமான தம்பதிகள் சந்தோஷமாக இல்லாததைக் கண்டு திருமணம் வேண்டாம் என முடிவெடுத்ததாகவும் ஐஸ்வர்யா லட்சுமி கூறியுள்ளார்.
44
Arjun Das, Aishwarya Lekshmi
திருமண்ம் செய்துகொள்ள சொன்ன என் தாயிடம் மேட்ரிமோனியில் ஒரு கணக்கை தொடங்க சொன்னேன். அவரும் தொடங்கிவிட்டார். ஆனால் அதில் என் புகைப்படத்தை பார்த்த பலரும் அது போலி என நினைத்துக் கொண்டனர். ஆனால் உண்மையிலேயே எனக்கு மேட்ரிமோனியில் கணக்கு உள்ளது என ஐஸ்வர்யா லட்சுமி கூறி இருக்கிறார். முன்னதாக, நடிகர் அர்ஜுன் தாஸுடன் ஐஸ்வர்யா லட்சுமிக்கு காதல் இருப்பதாக வதந்திகள் பரவின. இருவரும் இணைந்து எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. ஆனால், இருவரும் இதை மறுத்தனர்.