விஜய் டிவி சீரியல்களை டம்மி பீஸ் ஆக்கிய சன் டிவி தொடர்கள்! டாப் 10 சீரியல்களின் TRP இதோ

First Published | Nov 21, 2024, 1:57 PM IST

டாப் 10 டிஆர்பி ரேட்டிங்கில் விஜய் டிவி சீரியல்களை ஒரே அடியாக பின்னுக்கு தள்ளி சன் டிவி சீரியல்கள் தான் அதிகளவில் ஆதிக்கம் செலுத்தி உள்ளன. 

Tamil Serial TRP

தமிழ்நாட்டில் சன் டிவி சீரியல்களுக்கு எப்போதுமே தனி மவுசு உண்டு. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்களும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தன. சீரியல் பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வாரத்தில் 5 நாட்கள் மட்டும் ஒளிபரப்பாகி வந்த சீரியல்கள் தற்போது வாரத்தின் 7 நாட்களும் ஒளிபரப்பப்படுகின்றன. சீரியல்களுக்கு மக்கள் எந்த அளவு வரவேற்பு அளிக்கிறார்கள் என்பதை தீர்மானிப்பது அதன் டிஆர்பி ரேட்டிங் தான். அந்த வகையில் இந்த ஆண்டின் 46-வது வாரத்திற்கான டாப் 10 டிஆர்பி பட்டியல் வெளியாகி உள்ளது.

Top 10 Tamil serials

இந்த பட்டியலில் கடந்த வாரம் 10வது இடத்தில் இருந்த சந்தியா ராகம் சீரியலை பின்னுக்கு தள்ளி விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல், 5.84 டிஆர்பி புள்ளிகளுடன் 10ம் இடத்தை பிடித்திருக்கிறது. கடந்த வாரம் 9-ம் இடத்தில் இருந்த கார்த்திகை தீபம் சீரியல் தற்போது புது கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருவதால் இந்த வாரமும் 6.21 டிஆர்பி புள்ளிகளுடன் அதே இடத்தில் நீடிக்கிறது. இதற்கு அடுத்தபடியாக சன் டிவியின் ரஞ்சனி சீரியல் உள்ளது. கடந்த வாரம் 7-ம் இடத்தில் இருந்த இந்த சீரியல் தற்போது ஒரு இடம் பின்னுக்கு தள்ளப்பட்டு 6.33 டிஆர்பி புள்ளிகளுடன் 8-ம் இடத்தை பிடித்திருக்கிறது.

இதையும் படியுங்கள்... ஒரே வாரத்தில் பிக் பாஸ் வீட்டில் மலர்ந்த 2 காதல் - யார் அந்த ஜோடி புறாக்கள் தெரியுமா?

Tap to resize

serial TRP Rating

விஜய் டிவியில் சக்கைப்போடு போட்டு வந்த சிறகடிக்க ஆசை சீரியல் கடந்த வாரம் 8-ம் இடத்தில் இருந்த நிலையில் இந்த வாரம் ஒரு இடம் முன்னேறி டிஆர்பி ரேட்டிங்கில் 7-ம் இடத்தை பிடித்துள்ளது. இந்த சீரியலுக்கு 6.37 டிஆர்பி புள்ளிகள் கிடைத்திருக்கிறது. சன் டிவியின் இராமாயணம் தொடர் கடந்த வாரத்தை போல் இந்த வாரமும் 7.94 டிஆர்பி புள்ளிகளுடன் 6ம் இடத்தை தக்கவைத்து உள்ளது. அடுத்ததாக கேப்ரியல்லா செல்லாஸ் நடித்த சுந்தரி சீரியல் 8.63 புள்ளிகளுடன் 5-ம் இடத்தில் உள்ளது.

Top 10 Tamil serial TRP Rating

கடந்த வாரம் 3-வது இடத்தில் இருந்த சன் டிவியின் சிங்கப்பெண்ணே சீரியல், இந்த வாரம் ஒரு இடம் பின்னுக்கு தள்ளப்பட்டு 9.05 டிஆர்பி புள்ளிகளுடன் 4-ம் இடத்தை பிடித்திருக்கிறது. கடந்த வாரம் 5வது இடத்தில் இருந்த மருமகள் சீரியல் இந்த வாரம் மளமளவென முன்னேறி 9.17 டிஆர்பி புள்ளிகளுடன் 3-ம் இடத்தை பிடித்திருக்கிறது. முதல் இரண்டு இடங்களை வழக்கம் போல் மூன்று முடிச்சு மற்றும் கயல் ஆகிய சீரியல்கள் தக்க வைத்து உள்ளன. இதில் 2ம் இடத்தில் உள்ள மூன்று முடிச்சு சீரியலுக்கு 9.74 புள்ளிகளும், முதலிடத்தில் உள்ள கயல் சீரியலுக்கு 10.33 புள்ளிகளும் கிடைத்துள்ளது.

இதையும் படியுங்கள்... விவாகரத்துக்கு பின்னும் இப்படியா? ஜிவிக்காக ஓகே சொன்ன சைந்தவி - ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!

Latest Videos

click me!