விவாகரத்துக்கு பின்னும் இப்படியா? ஜிவிக்காக ஓகே சொன்ன சைந்தவி - ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!

First Published | Nov 21, 2024, 1:51 PM IST

பாடகி சைந்தவி மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இருவரும், விவாகரத்து பெற்று பிரிந்த நிலையில் மீண்டும் ஜிவியுடன் இணைந்து அவருடைய இசை கச்சேரியில் பாட போவதாக தெரிவித்துள்ளார்.
 

Celebrities Divorce

கோலிவுட் திரையுலகில், அடுத்தடுத்து பல எதிர்பாராத விவாகரத்து சம்பவங்கள் நடந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 2 மாதத்திற்கு முன்னர் நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய விவாகரத்தை அறிவித்த நிலையில், இவரை தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் பிரபல இசையமைப்பாளர், ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அவருடைய மனைவி சாய்ரா இருவரும் பிரிய உள்ள தகவலை உறுதி செய்தனர்.
 

Jayam Ravi and Aarti Divorce

இந்த இரண்டு விவாகரத்து சம்பவங்களும் தற்போது வரை ரசிகர்களால் மனதளவில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவே உள்ளது. காரணம் ஜெயம் ரவி தன்னுடைய மனைவி ஆர்த்தியை கல்லூரி காலங்களில் இருந்து காதலித்து, பின் அவருக்குக்காக கையை அறுத்து கொண்டு பெற்றோர் சம்மதத்தை பெற்று திருமணம் செய்தார். கடந்த 15 வருடங்களாக தமிழ் திரையுலகமே பொறாமை படும்படியான ஜோடியாக இருந்த இவர்கள், விவாகரத்து குறித்து அறிவித்த நிலையில், தற்போது இதுகுறித்த வழக்கு நீதி மன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த வாரம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் இதை விசாரித்த நீதிபதி, ஆர்த்தி - ஜெயம் ரவி இருவரையும் சமாதான பேச்சு வார்த்தை நடத்தும்படி உத்தரவிட்டுள்ளார்.

நடிச்சது ஒரே ஒரு தமிழ் படம்; பிரைவேட் ஜெட்டோடு பல கோடி சொத்துக்கு அதிபதி; யார் இந்த குழந்தை தெரியுமா?

Tap to resize

AR Rahman Divorce

இவர்களை தொடர்ந்து, கடந்த இரண்டு நாட்களாக உலக அளவில் ஹாட் டாப்பிக்காக இருக்கும் ஏ.ஆர்.ரகுமான் - சாய்ரா தம்பதி 29-ஆண்டுகள் கணவன் மனைவியாக வாழ்ந்து பிரிந்துள்ளனர். தோலுக்கு மேல் வளர்ந்த பிள்ளைகள் இருக்கும் நிலையில், மருமகன் எடுத்த பின்னர் சாய்ரா - ஏ.ஆர்.ரகுமான் இந்த முடிவை ஏன் எடுக்க வேண்டும் என்பது, மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.
 

Saindhavi and GV Divorce

இது ஒருபுறம் இருக்க, ஏ.ஆர்.ரகுமானின் சகோதரியின் மகனும், நடிகர் - இசையமைப்பாளராக தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஜிவி பிரகாஷ் கடந்த, மே மாதம் விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக அறிவித்தனர். திருமணம் ஆகி 11 வருடங்களுக்கு பின்னர் ஜிவி - சைந்தவி பிரியும் போதே இருவரும் நல்ல நண்பர்களாக இருப்போம் என தெரிவித்தனர்.

நாக சைத்தாயாவுக்கு முன் பிரபல தொழிலதிபரை காதலித்த சோபிதா! யார் அவர்?
 

GV Prakash and Saindhavi

பொதுவாக விவாகரத்து பெரும் ஒவ்வொரு ஜோடியும், இனிமேல் நாங்கள் நண்பர்களாக இருப்போம் என கூறினாலும், அப்படி இருப்பது இல்லை. தங்களுடைய வாழ்க்கையை பார்த்து கொண்டு நகர்ந்து சென்றுவிடுகிறார்கள். ஆனால் ஜிவி - சைந்தவி ஜோடி... விவாகரத்துக்கு பின்னரும் சிறந்த நண்பர்களாக இருப்பதை உறுதி செய்துள்ளனர். அதாவது அடுத்த மாதம் 7-ஆம் தேதி மலேசியாவில், தன்னுடைய முன்னாள் கணவர் ஜிவி பிரகாஷ் நடத்தும் இசை கச்சேரியில் ஜிவி கேட்டு கொண்டதால் சைந்தவி பாட உள்ள தகவலை அவரே கூறியுள்ளார். இந்த தகவல் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
 

Latest Videos

click me!